Shukra Peyarchi 2022
ஜோதிட சாஸ்திரத்தின் படி,
ஆகஸ்ட் மாதம் கிரகங்களின் மாற்றம் மற்றும் பல விரதங்கள் மற்றும் பண்டிகைகள் காரணமாக மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. சுக்கிரன் செல்வம், பொருள் மகிழ்ச்சி, காதல், திருமணம் ஆகியவற்றின்காரண கிரகம் ஆகும். வாழ்வில் வெற்றியைத் தரும் கிரகம் சூரியன். ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் இந்த இரண்டு கிரகங்களும் இந்த மாதம் சிம்மத்தில் சூரியனின் ராசியில் சூரியனும் சுக்கிரனும் இணையப் போகிறார்கள். சிம்மத்தில்சுக்கிரன் மற்றும் சூரியன் கூட்டணி மிகவும் சிறப்பாக இருக்கும்.
மேலும் படிக்க ....Sukran peyarchi: ஆகஸ்ட் 7 ல் சுக்கிரன் பெயர்ச்சி....இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிராசிக்கும்..
shukra peyarchi 2022
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பேச்சு சம்பந்தமான வேலையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அலுவலக பணியில் இருக்கும் மக்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். திடீர் பணம் பெருகும். திருமணமானவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும்.
shukra peyarchi 2022
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். வேலை செய்பவர்களின் சம்பளம் உயரும், உறவுமுறைகள் சிறப்பாக இருக்கும். அதிகப்படியான வேலை உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனுடன், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரிகள் நிறைய பணம் சம்பாதிப்பார்கள். பல வழிகளில் சம்பாதித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.