கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, இதயத்திற்கு அருகில் உள்ள தமனிகளில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது. இது இரத்த ஓட்டத்தில் சிக்கல்களை ஏற்படுத்த தொடங்குகிறது. மேலும் அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பது கண்கள், தோல் அல்லது முகம் போன்றவற்றின் மூலம் வெளிப்படுகிறது.
அத்துடன் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதைத் தவிர, நாம் தினசரி உடற்பயிற்சியும் செய்ய வேண்டும், இல்லையெனில் கலோரிகள் எரிக்கப்படாது உடலின் நரம்புகளில் கெட்ட கொழுப்பு சேரத் தொடங்கும். இதனால் மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதம் ஏற்படுகிறது. நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை நாம் அதிகமாக உட்கொள்ளும் பட்சத்தில் நமது ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும்.
34
High Cholesterol
1. கண்களில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்திருப்பதை கண்டறிய முடியும்.
2. கண்களின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள், கண் இமைகளின் தோற்றம், பார்வையில் உள்ள கருமையான கோடுகள் போன்றவற்றை கவனிக்க வேண்டியது அவசியமான ஒன்று.
3. ஆரம்பகாலத்தில் பார்வையில் சிறிதளவு குறைபாடு ஏற்பட்டு மங்கலான பார்வை, கார்னியாவைச் சுற்றி சாம்பல் அல்லது வெள்ளை அல்லது மஞ்சள் படிவுகள், கண்களைச் சுற்றி மஞ்சள் புடைப்புகள் ஆகியவை ஏற்படுவது உடலில் அதிக கொழுப்புகள் இருப்பதற்கான அறிகுறியாகும்.
4. அதிக கொலஸ்டராலால் சாந்தெலஸ்மா ஏற்படுகிறது, இது கண்களைச் சுற்றி அல்லது மூக்கிற்கு அருகில் உருவாகும் ஒரு உயர்ந்த அல்லது தட்டையான மஞ்சள் நிற பகுதி. சருமத்தில் கொலஸ்ட்ரால் படிவதால் இது உருவாகிறது, ஆனால் இது பார்வையை பாதிக்காது.
இதனை தவிர கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதா என்பதை கண்டறிவது எப்படி..?
1. கொலஸ்ட்ரால் அதிகரிப்பு லிப்பிட் ப்ரொஃபைல் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது.
2. இதயத்தின் தமனிகள் எவ்வளவு தடுக்கப்பட்டுள்ளன என்பதை ஆஞ்சியோகிராபி காட்டுகிறது.
3. மூளையில் அடைப்பு ஏற்பட்டால், மூளை நரம்புகளில் ஆஞ்சியோகிராபி செய்யப்படும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.