சளி, இருமல், உடல்வலி போக்கிடும் ''கொள்ளு ரசம்'' செய்வது எப்படி?

Published : Sep 07, 2022, 11:34 AM IST

இயற்கையோடு இனைந்த வாழ்வே நல்வாழ்வாக அமையும். இன்றைய காலத்தில் பழமையை விட்டுவிட்டு துரித உணவு வகைகளுக்கு மாறி வருகிறோம். அதனால், சளி, இருமல் காய்ச்சல் உடல்வலி பெரிதும் அவதிப்படுகிறார். சளி, இருமல் போன்றவற்றை விரைவில் போக்கி உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது இந்த கொள்ளு ரசம். இதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.  

PREV
14
சளி, இருமல், உடல்வலி போக்கிடும் ''கொள்ளு ரசம்'' செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்


கொள்ளு - 100 கிராம்

சீரகம் - ஒரு ஸ்பூன்

மிளகு - ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி - அரை ஸ்பூன்

கருவேப்பிலை - கொஞ்சமாக

கொத்தமல்லி தலை - கொஞ்சமாக

பூண்டு 5 பல்

தாளிப்பதற்கு ஒரு தக்காளி

சிறிது கருவேப்பிலை

புளி சிறிதளவு

உப்பு தேவையான அளவு

மஞ்சள் தூள் தேவையான அளவு

பெருங்காயம் தேவையான அளவு

நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்

கடுகு சிறிதளவு

24
செய்முறை

முதலில் கொள்ளை எடுத்து சுத்தம் செய்து அதில் உள்ள தூசிகளை நீக்கி வடச்சட்டியில் இட்டு கருகாமல் வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், வறுத்த கொள்ளை சட்டியிலிருந்து இறக்கி ஆறியபிறகு மிக்ஸியில் இட்டு ஒன்றிரண்டாக நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவு - ''திணை அடை''! இன்றே செய்து சாப்பிடுங்கள்!
 

34

தக்காளி, பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மீண்டும் மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த பொருட்கள் அனைத்தையும் மறு பாத்திரத்தில் மாற்றி எடுத்துக்கொண்டு, அதில் ஊற வைத்துள்ள புளியை கரைத்து வடிகட்டி அதில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு பிடித்த ''ரஷ்யன் சாலட்'' செய்வது எப்படி?

மொத்த கரைசலுடன், மூன்று டம்ளர் அளவிற்கு தண்ணீரை ஊற்றி அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

44

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக் கொள்ளவும். பின்னர், கரைத்து வைத்துள்ள அனைத்தையும் அந்த கடாயில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். நன்கு நுரை வரும் வரை சூடாக்கவேண்டும் நுரை வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது சுவையான மற்றும் சத்தான ஆரோக்கியமான கொள்ளு ரசம் தயார்.

இந்த கொள்ளு ரசம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் கரைத்து, இதயத்தையும் பாதுகாக்கும்.

Water Poori : தண்ணீரில் பூரி சுடலாம் வாங்க! - ஆரோக்கியமாக சாப்பிடலாம் வாங்க!

Read more Photos on
click me!

Recommended Stories