Sani Peyarchi: 141 நாட்களுக்கு பிறகு சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு அளவில்லாத அதிர்ஷ்டம் கிடைக்கும்

First Published Sep 7, 2022, 10:35 AM IST

Sani Peyarchi 2022 Palangal: சனி பகவான் கடந்த  ஜூன் 5 ஆம் தேதி முதல் வக்ர நிலையில் இருக்கிறார். இதையடுத்து, அவர் அடுத்த அக்டோபர் மாதத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவதால் எந்த ராசிக்காரர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

shani rashi parivartan 2022

நீதியின் கடவுளான சனி பகவான் ஜூன் 5 ஆம் தேதி, சனி பகவான் மகர ராசியில் பிற்போக்கானார். இதையடுத்து, 141 நாட்களுக்கு வக்ர பெயர்ச்சியாகி பிற்போக்கு நிலையில் இருக்கிறார். இதையடுத்து,  சனி கிரகம் 23 அக்டோபர் 2022 அன்று வழக்கமான நிலைக்கு வருவார். அதன் பிறகு 2023 ஜனவரி 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைகிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் பிற்போக்கு நிலையில் இருந்தால், அதன் சுப பலன் குறைகிறது. சனி பகவான் வக்ர நிலையிலிருந்து அக்டோபர் மாதத்தில் இயல்பு நிலைக்குதிரும்புகிறார். இதனால், எந்த ராசிக்காரர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

shani 001

துலாம்:

சனி பகவான் வக்ர நிலையில் இருந்து இயல்பு நிலைக்கு மாறுவதால் சில ராசிகளுக்கு சுப பலன்கள் ஏற்படும்.இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.  உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.  இந்த காலத்தில் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். இந்த பயணங்களால் அனுகூலமான பல பலன்களை பெறுவீர்கள். 

 

mangal-shani 001

மிதுனம்:
 
இந்த காலத்தில், உங்களுக்கு ​​நல்ல செய்திகள் கிடைத்து மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படும். வேலை மாற வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் வேலையில் மாற்றம் காணலாம். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். நிதி நிலை மேம்படும்.  பணியிடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் இது மிக நல்ல நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் நன்றாக உழைத்தால், அபரிமிதமான முன்னேற்றத்தை அடையலாம். 

shani dosa

கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் சனி பகவானின் சஞ்சாரத்தால் பல நன்மைகளைப் பெறுவார்கள். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றம் பெற விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும் ஆனால் செலவுகளும் அதிகரிக்கும். இருப்பினும் வருமானம் அதிகரிப்பதால் கடனில் இருந்து விடுபடுவீர்கள். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.  

click me!