காய்ந்த செடிகள்:
உங்கள் வீட்டில் நீங்கள் ஆசையாக வாங்கி வைக்கும் செடி துளிர்விடாமல் காய்ந்து போய் விட்டால் அதனை அப்படியே வைத்திருக்காமல் அப்புறப்படுத்திவிடுவது நல்லது. இல்லையென்றால் அது வீட்டை சுற்றிலும் எதிர்மறை ஆற்றலை உருவாக்கும். இதனால் நிறைய தொழில் பிரச்சினைகளும், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். அதுமட்டுமின்று, இரும்பு பொருட்கள், பழைய சுவாமி படங்கள், கிழிந்து போன துணிமணிகள், ஓட்டை உடைசல்கள் என்று நமக்கு பயன்படாத எந்த ஒரு பொருளையும், குப்பையில் தூக்கி எரிந்தால், வீட்டில் மகாலட்சுமி கடாட்சமாக இருக்கும், கண்டிப்பாக இல்லத்தில் தரித்திரம் நீங்கி செல்வ வளம் கூடும்.