வெறும் 7 நாட்களில் பாத வெடிப்பு மறைய சூப்பரான டிப்ஸ்!!

First Published Sep 7, 2024, 12:37 PM IST

Cracked Heels Tips : உங்களது கால் பாத வெடிப்புகளை போக்க வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து இந்த பிரச்சனையை சுலபமாக சரி செய்யலாம்.

பொதுவாகவே நம்மில் பலர் சரும அழகை பராமரிப்பதில் தான் அதிகம் கவனம் செலுத்துவதால், பாதங்களில் கவனம் செலுத்துவதில் மறந்து விடுகிறோம். இதனால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. ஆனால் உண்மையில் நமக்கு பாத ஆரோக்கியமும் மிகவும் அவசியம். 

இன்றைய காலத்தில் பியூட்டி பார்லர்களில் முக அழகு மட்டுமின்றி, பாதங்களையும் அழகுப்படுத்துவதற்கேன பெடிக்யூர்
என்னும் ட்ரீட்மென்ட் செய்யப்படுகிறது. இந்த ட்ரீட்மென்ட் எப்பேர்ப்பட்ட மோசமான பாதங்களையும் சுத்தப்படுத்தி அழகாக்குகிறார்கள். அதுமட்டுமின்றி, பாதங்களில் உள்ள நரம்புகளை தூண்டி ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறார்கள். 

உங்களுக்கு தெரியுமா.. நம்முடைய உடலில் இருக்கும் முக்கியமான நரம்புகள் பாதங்களோடு இணைந்திருக்கிறது. எனவே, நாம் பாதங்களை அவ்வப்போது மசாஜ் செய்தால், ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு உடலும் மனதும் ரிலாக்ஸ் ஆகும்.

ஆனால், நீங்கள் உங்களது பாதத்தை  ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே அழகுப்படுத்தலாம் தெரியுமா? எனவே, உங்களது பாதங்களை பராமரிக்க நீங்கள் என்ன செய்ய என்பதை இங்கு பார்க்கலாம்.

மருதாணி இலை : மருதாணி இலை மற்றும் கிழங்கு மஞ்சளை ஒன்றாக அறுத்து அந்த பேஸ்டை நீங்கள் இரவு தூங்கச் செல்வதற்கு முன் உங்கள் பாதங்களில் இருக்கும் வெடிப்புகளின் மீது தடவி, சிறிது நேரம் கழித்து உங்களது பாதத்தை சுத்தம் செய்துவிடுங்கள். ஆனால், நீங்கள் உங்களது பாதத்தை வெதுவெதுப்பான நீரில் பாதத்தை நன்கு சுத்தம் செய்த பிறகே இந்த பேஸ்ட்டை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் வாரத்திற்கு இரண்டு நாள் செய்து வந்தால், உங்களது பாத வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கும்.

கிழங்கு மஞ்சள் : மஞ்சள் ஒரு சிறந்த கிருமியாகும். எனவே உங்களது பாத வெடிப்புகளை போக்க, கிழங்கு மஞ்சளை  பொடியாக்கி அதனுடன் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து அதை உங்களது பாத வெடிப்பில் தடவி வந்தால், நாளடைவில் வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கும்.

இதையும் படிங்க:  கால் ஆணி உள்ள இடத்தில் 'இத' மட்டும் தடவுங்க.. 5 நாட்களில் காணாமல் போகும்!

Latest Videos


எலுமிச்சை சாறு : எலுமிச்சை ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, அழகுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே உங்களது பாத வெடிப்பை சரி செய்ய ஒரு அகலமான பாத்திரத்தில் சூடான தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழத்தை நன்கு பிழிந்து கொள்ளுங்கள் பிறகு அந்த நீரில் உங்களது பாதத்தை சுமார் 15 நிமிடம் வைக்கவும்.

அவ்வப்போது நாரைக் கொண்டு உங்களது பாதங்களை தேய்க்கவும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் பாதங்களில் இருக்கும் அழுக்குகள் வெடிப்புகள் நீங்கி, பாதம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதை நீங்கள் தினமும் கூட செய்யலாம் இப்படி செய்வதன் மூலம் பாதத்தில் இருக்கும் கெட்ட செல்கள் நீங்கிவிடும். வெந்நீருடன் நீங்கள் சிறிதளவு கல் உப்பு மற்றும் நல்ல ஷாம்புவையும் கூட பயன்படுத்தலாம். பிறகு நீங்கள் பாதத்தை துடைத்து எண்ணெயால் மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

இதையும் படிங்க: குதிகால் வலியை உடனடியாக விரட்டியடிக்க இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க!! 

வேப்பிலை : உங்களது பாத வெடிப்பை போக்க வேப்பிலை அரைத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து அந்த பேஸ்ட்டை வெடிப்பு மீது தடவி சுமார் அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் காலை கழுவுங்கள். பிறகு உங்களது பாதத்தை உடைத்து வேஸ்லின் தடவுங்கள். பின் சாக்ஸ் போட்டுக் கொள்ளுங்கள். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்களது பாத வெடிப்பு முற்றிலும் நீங்கிவிடும்.

தேன்: தேன் பாதங்களை பாதங்களில் இருக்கும் வெடிப்புகளை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, இது சருமத்தை ஈரப்பதமக்கி சருமம் வறண்டு போவதை தடுக்கிறது மற்றும் சருமத்தை புத்துயிர் செய்ய உதவுகிறது. எனவே, பாதங்களில் உள்ள வெடிப்பை சரி செய்ய முதலில் தண்ணீரில் காலை நன்றாக கழிவி, பிறகு தேனை பாத வெடிப்பின் மேல் தடவி, சுமார் 15 நிமிடம் மசாஜ் செய்யவும். பிறகு மீண்டும் பாதங்களை தண்ணீரில் கழுவும். இப்படி செய்வதன் மூலம் நாளடைவில் பாத வெடிப்பு மறைய தொடங்கும்

click me!