உப்பு சாப்பிட்டால் ஆயுள் குறையுமா?
சாப்பிடும் முன் தட்டில் உப்பு வைத்து சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உண்டு. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று ஒரு பழமொழி உள்ளது. உணவின் சுவையை மேம்படுத்துவதில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் உப்பை அதிகமாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.
உப்பு சாப்பிட்டால் ஆயுள் குறையுமா?
இந்த பழக்கம் நல்லதா அல்லது கெட்டதா என்று தெரியாமல் பலர் அதிக உப்பை உட்கொள்ளத் தொடங்குகிறார்கள். உப்பு சாப்பிடும் போது உண்மையில் என்ன நடக்கும்?
உப்பு சாப்பிட்டால் ஆயுள் குறையுமா?
நாம் உணவாக உட்கொள்ளும் உப்பு அடிப்படையில் சோடியம் குளோரைடு ஆகும். இதில் 40 முதல் 60 சதவீதம் வரை சோடியம் மற்றும் குளோரைடு உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் படி உப்பு உட்கொள்வது எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்? அதிக உப்பு சாப்பிடுபவர்கள் கண்டிப்பாக இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
உப்பு சாப்பிட்டால் ஆயுள் குறையுமா?
அதிக உப்பு உட்கொள்வது விஷத்தை உட்கொள்வது போன்றது. உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின்படி, பெரும்பாலான மக்கள் தங்களுக்குத் தேவையான அளவை விட இரண்டு மடங்கு உப்பை உட்கொள்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.89 மில்லியன் மக்கள் அதிகப்படியான உப்பு உட்கொள்வதால் இறக்கின்றனர் என்பது பலருக்கும் தெரியாத அதிர்ச்சி தகவல்.
உப்பு சாப்பிட்டால் ஆயுள் குறையுமா?
அதிகப்படியான உப்பு உட்கொள்வது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது என்று யுஎஸ் சுகாதாரத் துறை கூறுகிறது. இதைத் தவிர, கால்சியம் குறைபாட்டிற்கு மற்றொரு முக்கிய காரணம் அதிகப்படியான உப்பு உட்கொள்வது. எனவே உப்பை மிதமாக உட்கொள்ள வேண்டும்.