இடது பக்கமா வலது பக்கமா? விமானத்தில் பயணிக்கும் போது எந்தப் பக்கம் உட்காருவது நல்லது?

First Published Sep 7, 2024, 10:25 AM IST

விமானப் பயணத்தின் எந்த இருக்கையில் அமர்வதும் பாதுகாப்பானதுதான். ஆனால், வேறு பல காரணங்களை முன்னிட்டு இடது பக்க சீட் வேண்டுமா வலது பக்க சீட் வேண்டுமா என்று தேர்ந்தெடுக்கலாம்.

How to choose a seat in Flight

விமானப் பயணத்தின் போது சில பயணிகள் ஜன்னல் ஓரத்தில் உள்ள இருக்கையில் அமர்வதை விரும்புவார்கள், சிலர் நடைபாதையை ஒட்டிய இருக்கையில் உட்கார விரும்புவார்கள். ஆனால் விமானத்தில் வசதியாகப் பயணிக்க எந்தப் பக்கத்தில் உட்கார வேண்டும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இரண்டு பக்க இருக்கைகளும் பாதுகாப்பானவை தான். ஆனால், வேறு காரணங்களை முன்னிட்டு இடது பக்க சீட் வேண்டுமா வலது பக்க சீட் வேண்டுமா என்று தேர்ந்தெடுக்கலாம்.

Better view

பலரும் விமானத்தில் பயணிக்கும்போது வானத்தையும் பூமியையும் உயரத்தில் இருந்து கண்டு ஆசைப்படுகிறார்கள். ஜன்னலோர இருக்கையை விரும்பினால், விமானம் பயணிக்கும் பாதை எப்படி என்று சரிபார்க்க வேண்டும். விமானப் பாதையின் அடிப்படையில் எந்தப் பக்கம் அமர்ந்தால் ஜன்னல் வழியாக காட்சிகள் நன்றாகத் தெரியும் என்பதைக் கணித்து முடிவு செய்யலாம்.

Latest Videos


Changing route

ஆனால், விமானம் பயணிக்கும்போது திசை மாறினால் நாம் தேர்ந்தெடுக்கும் ஜன்னலோர இருக்கை எதிர்பார்த்தபடி சிறந்த காட்சியைக் கொடுப்பதாக இல்லாமலும் போகலாம். அதேபோல வானிலை காரணமாகவும் தெளிவான காட்சிகளைப் பார்க்க முடியாமல் போகும்.

Avoiding Sun light

இரவு நேரத்தில் விமானத்தில் பயணிக்கும்போது பூமியில் மின்னொளியில் ஒளிரும் பகுதிகளைப் பார்த்து ரசிப்பது சிறப்பான அனுபவமாக இருக்கும். ஆனால் பகல்நேர விமானத்தில் பறக்கும்போது, சூரிய ஒளியை மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். சூரிய ஒளி அதிகம் படாத வகையில் எதிர் இருக்கையில் உட்கார்ந்துகொள்ளலாம். வெயிலைத் தவிர்க்க இந்த உத்தியை பயன்படுத்தலாம்.

Sleeping in Flight

விமானத்தில் தூங்குபவராக இருந்தால் எந்தப் பக்க இருக்கையில் அமர வேண்டும்? விமானங்களில் தூங்குபவர்கள் விமானம் திரும்பும் தருணங்களில் வலது அல்லது இடது பக்கம் லேசாகச் சாயக்கூடும். இவர்கள் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டால், விமானம் திசைமாறும்போது ஜன்னல் பக்கம் சாய்ந்துகொள்லாம். நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு இந்த யோசனை பயனுள்ளதாக இருக்கும்.

Working in Flight

விமானத்தில் பயணிக்கும்போது பணிபுரிபவராக இருந்தால் அதற்கு ஏற்ப இருக்கைத் தேர்வு செய்யலாம். வலது கைப் பழக்கம் கொண்ட நபராக இருந்தால் விமானத்தின் இடது பக்கத்தில் நடைபாதையை ஒட்டிய இருக்கையில் உட்காரலாம். இது லேப்டாப்பில் வேலை செய்வதற்கு எளிதாக இருக்கும்.

Front or back seats

விமானத்தில் எந்தப் பக்கத்தில் உட்காருவது என்று முடிவு செய்ய பயணிகளுக்கு இன்னும் பல காரணங்கள் இருக்கலாம். சிலர் முன் இருக்கையில் உட்காருவதை விரும்புவார்கள். இந்த இருக்கையில் மற்ற இருக்கைகளைக் காட்டிலும் கால் வைத்துகொள்ள வசதியான இடம் இருக்கும் என்பது ஒரு முக்கியமான காரணம். இன்னும் சிலர் விமானத்தில் கழிப்பறைக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர விரும்ப மாட்டார்கள். எனவே எதிர்முனையில் உள்ள இருக்கைகளை விரும்பக்கூடும்.

click me!