அதிக முட்டை சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் :
முட்டை ஆரோக்கியமானது என்றாலும், அதை அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். அதுமட்டுமின்றி, அஜீரணம், வாயு தொல்லை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகளும் வரும். இது தவிர, வயிற்றுப்போக்கு, எரிச்சல் போன்றவையும் ஏற்படும். இதனால் குடல் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். அதிலும் குறிப்பாக, அதிக கொழுப்புள்ள உணவுகளுடன் முட்டையும் சேர்ந்து சாப்பிட்டால், கண்டிப்பாக மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
பொதுவான ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளில் ஒன்று முட்டை. நீங்கள் முட்டை சாப்பிடுட்ட பிறகு எரிச்சல், தோல் அலர்ஜி, சொறி, சுவாசிப்பதில் சிரமம், கண்கள் சிவத்தல், நீர் வழிதல், தலை சுற்றல், மார்பு இறுக்கம் இதுபோன்ற அறிகுறிகளை சந்தித்தால் உடனே மருத்துவரை சந்தித்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இது போன்று அதிகரிகளில் சந்தித்தால் கண்டிப்பாக முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.