ஒரு பிள்ளையை பெற்றெடுத்தது முதல், சரியான நேரத்தில் உணவு கொடுப்பதில் துவங்கி, படிப்பு, அவர்களின் வருங்காலம் வேலை என அனைத்தையும் நினைத்து தான் ஒவ்வொரு விஷயத்தையும் செய்கிறார்கள். அந்த வகையில் தங்களின் பிள்ளைகள் திருமணம் என்பது அவர்களுக்கு மிகப்பெரிய கனவு என்றே கூறலாம். சிலருக்கு திருமணம் உடனே கைகூடி விட்டாலும், சிலருக்கு தோஷம், திருமண தடை, வசதி, படிப்பு, சரியான வேலை இல்லாமை, போன்ற காரணத்தால் திருமணம் தள்ளிக்கொண்டே செல்கிறது.