Cooking Oils : கொலஸ்ட்ரால் பிரச்சினையே வரக்கூடாதா? அப்ப சமையலுக்கு இந்த 'ஆயில்' யூஸ் பண்ணுங்க..

Published : Nov 27, 2025, 02:24 PM IST

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சில சமையல் எண்ணெய்கள் குறித்து இந்த காணலாம்.

PREV
16
Low Fat Cooking Oils

தற்போது நம்முடைய வாழ்க்கை முறையில் நிறைய மாற்றங்கள் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. அதன் விளைவாக நம் ஒவ்வொருவருடைய வீட்டிலும் சர்க்கரை நோய், இரத்த அழுத்த பிரச்சனை, உடல் பருமன் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கண்டிப்பாக இருப்பர். 

26
Healthiest Oils For Cooking

இத்தகைய சூழ்நிலையில், சமீப காலமாகவே மக்கள் மத்தியில் கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகரித்துள்ளது. உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் இரத்த நாளங்கள் சுருங்கத் தொடங்கும். இதனால் இதய நோய் அபாயம் அதிகரிக்கும் எனவே, இதயம் ஆரோக்கியமாக இருக்க கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.

36
Oils That Burn Fat

இதற்கு எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கூடவே கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சில எண்ணெயையும் சமையலுக்கு பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த பதிவில் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த சமையலுக்கு எந்த எண்ணெயை பயன்படுத்த வேண்டுமென்று பார்க்கலாம்.

46
ஆலிவ் ஆயில் :

ஆலிவ் ஆயில் நம்முடைய ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது ஆரோக்கியமான கொழுப்புகள் இந்த எண்ணெயில் நிறைந்திருக்கிறது. அவை சருமம், முடி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். எனவே ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்தி வந்தால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தாங்காது. இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

56
நல்லெண்ணெய் :

இந்த எண்ணெய் இதய நோயாளிகள் மற்றும் உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு ரொம்பவே நல்லது. ஏனெனில் இந்த எண்ணெயில் நிறைவறா கொழுப்புகள், மோனோசாச்சுரேட்டட், பாலிஅன்சாச்சுரேட்டட் போன்ற கொழுப்புகள் உள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக குளிர்காலத்தில் இந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவது உடலை சூடாக வைத்திருக்கும். அதேசமயம் உடல் சூட்டையும் தணிக்கவும் உதவும்.

66
கடலை எண்ணெய் :

வேர்க்கடலையில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இந்த எண்ணெய் ரொம்பவே நல்லது. குளிர்காலத்தில் இந்த எண்ணெய் பயன்படுத்தினால் உடலை சூடாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்கும். மேலும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க பெரிதும் உதவுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories