Parenting Tips : சின்ன வயசுல 'குழந்தைகளுக்கு' கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டிய 5 பழக்கங்கள்!

Published : Nov 26, 2025, 06:23 PM IST

ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தை எதிர்காலத்தில் சிறந்த விளங்க வேண்டுமென்று விரும்புவார்கள். அதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில நல்ல பழக்கவழக்கங்களை சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும். அவை என்னென்ன என்று இங்கு காணலாம்.

PREV
16
Parenting Tips

குழந்தைகளின் எதிர்காலம் வலுவாகவும், பிரகாசமாகவும் இருக்க, சிறுவயதிலிருந்தே நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொடுப்பது பெற்றோர் தரும் மதிப்புமிக்க பரிசு. அவை அவர்களது வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியாக அவர்களை வலிமையாக்கும். ஆக மொத்தத்தில் இது அவர்களின் ஆளுமைக்கு அடித்தளமாகும். எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைக்கு சிறுவயதிலிருந்தே கண்டிப்பாக சொல்லிக் கொடுக்க வேண்டிய 5 நல்ல பழக்கங்கள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

26
அதிகாலையில் எழுதல் :

இரவு சீக்கிரமாக தூங்க சென்று அதிகாலையில் எழும் பழக்கத்தை ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். இது அவர்கள் உடல், மனம் மற்றும் உணர்ச்சி வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த பழக்கத்தால் அவர்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அவர்களது மூளை நன்றாக வேலை செய்யும். படிப்பு, விளையாட்டு என அன்றாட பணிகள் மீது கவனம் செலுத்தும் திறன் அதிகரிக்கும். மேலும் உடல் வளர்ச்சி நல்ல தூக்கம் தரும். இது தவிர மன அழுத்தம், பதட்டம், எரிச்சலை குறைக்கும்.

36
புத்தகங்களை படித்தல் :

சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும். இது அவர்களின் கற்பனை திறனை, படைப்பாற்றலை அதிகரிக்க உதவும். அதுமட்டுமல்லாமல் வாசிப்பு, மொழி திறனையும், பேச்சு திறனையும் மேம்படுத்த உதவும்.

46
ஆரோக்கியமான உணவை சாப்பிடும் பழக்கம் :

சத்தான உணவு உண்ணும் குழந்தைகள் உடல்ரீதியாக வலுவாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். பழங்கள், காய்கறிகள் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. உடல் பருமன், நீரிழிவு அபாயங்கள் குறையும். எனவே, சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடும் பழக்கத்தை பெற்றோர்கள் பழக்க வேண்டும். இது அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதற்கான அடித்தளம் ஆகும்.

56
உண்மை பேசுதல் :

உண்மை பேசுவதால் குழந்தைகளிடம் நேர்மை, நம்பிக்கை, தைரியம் போன்ற குணங்கள் வளரும். தவறு செய்தாலும் அதை ஒப்புக்கொண்டு, சரிசெய்ய முயற்சிப்பார்கள். இது மன அமைதிக்கு வழிவகுக்கும்.

66
கோபத்தை கட்டுப்படுத்துதல் :

கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரிந்த குழந்தைகள் நிதானமாகச் சிந்தித்து சரியான முடிவுகளை எடுப்பார்கள். இந்தப் பழக்கத்தால் சண்டைகள் குறையும். பொறுமை இயல்பாகவே அதிகரிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories