Piles: பைல்ஸ் பிரச்சனையால் தொல்லையா..? கவலை வேண்டாம்...இதை மட்டும் கட்டாயம் சாப்பிட்டு பாருங்க...

First Published | Jul 20, 2022, 1:45 PM IST

Piles: பைல்ஸ் என்னும் மூல நோய் பிரச்சனை காரணமாக, தினமும் அவதிப்படுகிறீர்களா? என்றால் இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பைல்ஸ் என்னும் மூல நோய் காரணமாக, ஆசனவாய் மற்றும் மலப் பாதைகளைச் சுற்றிலும் வீக்கம் ஏற்படுகிறது. பைல்ஸ் பிரச்சனையைப் புறக்கணித்தால், மலக்குடலில் இருந்து ரத்தம் வந்து, குடல் இயக்கத்தில் சிரமம் ஏற்படும். இதனால், வெடித்து நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும். இது சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

பைல்ஸ் பெரும்பாலும், பெரியவர்களை தான் குறி வைத்து தாக்கும். அதிலும், பெண்களை விட ஆண்களுக்கு இது அதிகமாக ஏற்படுகிறது. ஒருவருக்கு பைல்ஸ் பல்வேறு காரணங்களால் வரலாம். அதில் முக்கியமான ஒன்று என்றால் நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை. ஒருவேளை உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். இல்லையெனில், பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எனவேம், நாம் இந்த பதிவின் மூலம் நோயின் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சையைப் பற்றி தெரிந்து வைத்து கொள்வோம்.மேலும் படிக்க...Backpain: முதுகுவலியா..? ஒரே இடத்தில நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவரா நீங்கள்..?

Tap to resize

piles

இன்றைய நவீன வாழ்கை முறை பழக்கத்தில், லட்சக்கணக்கான மக்கள் பைல்ஸ் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள். உங்களுக்கு, முள்ளங்கி ஓர் சிறந்த உணவு பொருளாகும். 

முள்ளங்கியில் மூல நோயை குணப்படுத்தும் திறன் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. முள்ளங்கி ஜூஸ் பைல்ஸ் பிரச்சனைக்கு மிகவும் அற்புதமான பானம். தினமும் காலை மற்றும் மாலை அரை கப் முள்ளங்கி ஜூஸ் குடிக்க வேண்டும். தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வர மூல நோய் விரைவில் குணமாகும். மூல நோயால் மிகவும் அவதிப்படுபவர்கள் வேண்டுமானால் இதை முயற்சித்துப் பாருங்கள்.

முள்ளங்கியின் பயன்கள்:

பைல்ஸ் என்னும் மூல நோய் உள்ளவர்களுக்கு முள்ளங்கி சிறந்த உணவாகும். முள்ளங்கியில் அதிக அளவு கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது மலத்தை மென்மையாக்க உதவுவது மட்டுமல்லாமல் செரிமானத்திற்கும் உதவுகிறது. இது மூல நோயால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும். மேலும் படிக்க...Backpain: முதுகுவலியா..? ஒரே இடத்தில நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவரா நீங்கள்..?

 முள்ளங்கியை உட்கொள்ளும் வழிமுறைகள்:

சில முள்ளங்கி இலைகளை எடுத்து, கழுவி, நிழலில் உலர்த்தவும். காய்ந்ததும் பொடி செய்து கொள்ளவும். தினமும் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். அப்படி செய்தால், மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். இது தவிர, வெள்ளை முள்ளங்கியை பேஸ்ட் செய்து அதில் சிறிது பால் கலக்கவும். இந்த பேஸ்டை ஆசன வாயில் மற்றும் வலி மற்றும் வீக்கம் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.  அப்படி செய்தால், ஆசன வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி விரைவில் குணமாக உதவும்.  

மேலும் படிக்க...Backpain: முதுகுவலியா..? ஒரே இடத்தில நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவரா நீங்கள்..?

Latest Videos

click me!