உலக செஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 அன்று கொண்டாடப்படுகிறது. செஸ் (சதுரங்கம்) விளையாட்டு ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றியது. சர்வதேச செஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் உலக செஸ் கூட்டமைப்பு ஸ்தாபக நாளாக கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில், இன்று சர்வதேச செஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, நாம் இந்த நாளில் சர்வதேச செஸ் தினம் என்றால் என்ன? செஸ் விளையாட்டின் வரலாறு என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
சதுரங்கம் என்பது நம்முடைய பழமையான விளையாட்டுகளில் ஒன்றாகும். ஆம், கி.பி.ஆறாம் நுாற்றாண்டில் இந்தியாவில் செஸ் குறித்த எழுத்துப்பூர்வமான வடிவம் பதிவு செய்யப்பட்டது. அந்த நாளில், போர்க்களத்தில் எதிரிகளை சாய்க்க தேவையான திட்டங்களை வகுக்கும் கருவியாகவும் செஸ் பயன்பட்டது. பின் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளில் பிரபலம் ஆனது. கி.பி., 17 வது நுாற்றாண்டில் நவீன அளவிலான விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டது. இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில், அனைத்து வயது மக்களாலும் விளையாடப்படுகிறது.
34
International Chess Day 2022:
19ஆம் நூற்றாண்டில் செஸ்:
1800களில் செஸ் விளையாட்டு அபரீதமான வளர்ச்சியை கண்டது. முன்னதாக, செஸ் போட்டி சுமார் 14 மணி நேரம் வரை நடைபெற்று வந்தது. முஹல் முறையாக 19ஆம் நூற்றாண்டில் தான் செஸ் போட்டிக்கான நேரம் ஒழுங்குமுறை வந்தது. ஸ்டெயினிட்ஸ் என்பவர் 1886ஆம் ஆண்டு முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். இதையடுத்து, 1920களில் நவீன செஸ் போட்டியின் வளர்ச்சி நன்றாக அமைந்தது. இதன் காரணமாக 1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் செஸ் விளையாட்டைச் சேர்க்க பணிகள் நடைபெற்றது.
ஜூலை 20, 1924 அன்று, பிரான்சின் பாரிஸில் நடந்த எட்டாவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில், முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது. இதையடுத்து, அந்தப் போட்டியின் கடைசி நாளன்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு(FIDE) 1924ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த நாள் தான் சர்வதேச செஸ் நாளாக இன்று வரை கொண்டாப்பட்டு வருகிறது.