Lakshmi Grace: இந்த ராசிகளுக்கு ஜூலை 24 வரை லட்சுமி தேவியின் நேரடி அருள் கிடைக்கும்...உங்கள் ராசி என்ன.?

First Published | Jul 20, 2022, 9:51 AM IST

Lakshmi Grace: ஜூலை மாதத்தின் இந்த வாரம் நிகழும் முக்கிய கிரகங்களின் ராசி மாற்றம், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.

Lakshmi Grace:

ஜோதிடத்தின் பார்வையில், கிரங்களின் ராசி மாற்றம், நட்சித்திர பெயர்ச்சி சில ராசிகளுக்கு சிறப்பாக இருக்கும். ஜூலை 13ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜூலை 16 ஆம் தேதி, ஜூலை மாதத்தில், சூரியன் கடக ராசியில் நுழைந்துள்ளது. அதேபோன்று இந்த வாரம் நிகழும் முக்கிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் 12 ராசிக்காரர்களையும் பாதிக்கும். ஆனால், சில ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் நிலை சிறப்பு பலன் தரும் மற்றும் சில ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். எனவே இந்த வாரம் ஜூலை 18 முதல் ஜூலை 24 ஆம் தேதி 2022 வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

மேலும் படிக்க....Guru Peyarchi 2022: குருவின் வக்ர பெயர்ச்சியால்...ஜூலை 29 முதல் இந்த ராசிகளுக்கு தலைவிதி தலைகீழாய் இருக்கும்..

Lakshmi Grace:

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.உங்களுக்கு இந்த வாரம்  நேரம் சாதகமாக இருக்கும். வேலை மாற்றம் அல்லது பதவி உயர்வு சாத்தியமாகும். நீங்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம். பண வரவுகள் இருக்கும்.  தொழில், வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க....Horoscope Today: இன்றைய 12 ராசிகளின் பலன்கள்...கிரகங்களின் மாற்றத்தால் கன்னி, மிதுனம் ராசிகளுக்கு பம்பர் பலன்

Tap to resize

Lakshmi Grace:

 கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இருப்பினும், வேலை சம்பந்தமாக மன உளைச்சல் ஏற்படலாம். பணம் சம்பாதிக்கும் பாதை திறக்கும். தேங்கி கிடந்த பணம் திரும்பக் கிடைத்து மனம் மகிழ்ச்சியடையும். 

Lakshmi Grace:

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு வேலை சம்பந்தமாக மன உளைச்சல் ஏற்படலாம். தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதார வெற்றி கிடைக்கும். வங்கி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறையில் தொடர்புடையவர்களின் முன்னேற்றம் சாத்தியமாகும். நீங்கள் அரசியலில் வெற்றி பெறலாம். புதிய வேலைகளைத் தொடங்குவது நல்லது.

மேலும் படிக்க....Horoscope Today: இன்றைய 12 ராசிகளின் பலன்கள்...கிரகங்களின் மாற்றத்தால் கன்னி, மிதுனம் ராசிகளுக்கு பம்பர் பலன்

Latest Videos

click me!