கிச்சனில் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லையா..? இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்...பூச்சிகளை ஓட ஓட விரட்டும்...

First Published Jul 20, 2022, 10:47 AM IST

lizard: நம்முடைய சமையல் கட்டில் இருக்கும் பல்லி, கரப்பான் பூச்சிகளை ஓட ஓட விரட்டுவதற்கு என்ன செய்வது தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

பல்லிகள் நம்முடைய வீடுகளில் சர்வ சாதாரணமாக உலா வரும். குறிப்பாக, பல்லி நம்முடைய வீட்டின் சமையல் அறையில் இருப்பது என்பது ரொம்பவும் ஆபத்தான விஷயம் ஆகும். பல்லிகள் நம்முடைய சமையலில் விழுந்து விட்டால் உயிருக்கு ஆபத்து வரும் என்று பலருக்கு பல்லியை பார்த்தாலே ஒரு வித பயம் இருக்கும்.

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் வக்ர பெயர்ச்சியால்...ஜூலை 29 முதல் இந்த ராசிகளுக்கு தலைவிதி தலைகீழாய் இருக்கும்..

கரப்பான். பூச்சி பள்ளி போன்றவை ஒருமுறை படையெடுக்க  ஆரம்பித்துவிட்டால் அது முட்டையிட்டு குஞ்சு பொரிக்க ஆரம்பித்து விடும்.  இதனால், பல்லி அல்லது கரப்பான் பூச்சிகளிடமிருந்து வீட்டின் பொருட்களை பாதுகாப்பாக வைப்பது என்பது கடினம் ஆகிவிடும். எனவே, நாம் சமையல் கட்டில் இருக்கும் பல்லி கரப்பான் பூச்சிகளை ஓட ஓட விரட்டுவதற்கு என்ன செய்வது தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

சமையல் அறையில் உலா வரும் பல்லிகள், கரப்பான் பூச்சிகள் காரணமாக  பாத்திரங்களை கழுவி வைத்தாலும் பயன்படுத்தும் முன்பு ஒரு முறை கழுவ வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஏனெனில்  பல்லிகளில் நடமாட்டம் அல்லது இரவு நேரங்களில் பூச்சிகளின் நடமாட்டம் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இதனால் கண்ணுக்கு தெரியாத எச்சங்களை பாத்திரங்களில் இட்டு விட்டு சென்று விடும். அதை கவனிக்காமல் நாம் சமைப்பதால் நமக்கு தேவையில்லாத உடல் நல கோளாறுகள் ஏற்படுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக, பெரிய பல்லிகளை விட சிறிய பல்லிகளால் நிறையவே ஆபத்து உண்டு.  

பல்லி மற்றும் கரப்பான் பூச்சியை எப்படி விரட்டுவது?

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை சாறு - அரை மூடி

டெட்டாயில் -ஒரு மூடி

பூண்டு -4அல்லது 5

 வெங்காயம் -4அல்லது 5

புதினா இலைகள் - நான்கைந்து 

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு சிறிய பிளாஸ்டிக் பௌல் ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு மூடி டெட்டாயில், அரை மூடி எலுமிச்சை சாறு ஊற்றிக் கொள்ளுங்கள். நான்கு பூண்டு, பாதி அளவிற்கு வெங்காயத்தை நன்கு இடித்து எடுத்து ஒரு துணியில் சுற்றி அதன் சாறு ரெண்டு ஸ்பூன் அளவுக்கு எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் உங்களிடம் இருந்தால் நான்கைந்து புதினா இலைகளையும் சேர்க்கலாம்.மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் வக்ர பெயர்ச்சியால்...ஜூலை 29 முதல் இந்த ராசிகளுக்கு தலைவிதி தலைகீழாய் இருக்கும்..

பின்னர் இந்த கலவையில் ஒரு பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தி எங்கெல்லாம் பல்லி நடமாட்டம் இருக்கிறதோ, அங்கே எல்லாம் வைத்து விடலாம். மேலும் இதனை  வடிகட்டி ஸ்பிரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டால் பல்லிகள் இருக்கும் இடங்களில் ஸ்பிரே செய்தால் போதும் குறிப்பாக ஒரு பல்லி கூட இந்த வாசத்திற்கு அந்த பக்கம் வராது.இதனால் சமையல் கட்டில் பல்லியின் எச்சங்கள் மற்றும் பல்லியினால் வரக்கூடிய பிரச்சனைகள் இல்லாமல் சுத்தமாக இருக்கும்.

மேலும் படிக்க...Guru Peyarchi 2022: குருவின் வக்ர பெயர்ச்சியால்...ஜூலை 29 முதல் இந்த ராசிகளுக்கு தலைவிதி தலைகீழாய் இருக்கும்..

 இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இவ்வாறு செய்ய பல்லிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்து விடலாம். 
 

click me!