ஆடி பிறந்தாலே நம்முடைய ஊர்களில் விழாக்கள் களை கட்டும். அம்மன் கோவில் திருவிழாக்கள் முதல் ஆபர்கள் வரை எங்கு பார்த்தாலும், கூட்டம் எகிறும். ஆடி முதல் நாளை ஆதி பண்டிகை என்று கொண்டாடுவார்கள். அதன் பின்னர், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை எல்லாம் முக்கிய நாட்களில் அம்மனுக்கு பூஜைகள் செய்ய ஆரம்பித்து விடுவோம். இப்படி ஆடி மாதம் அம்மனுக்கு செய்யும் பூஜையில் நெய்வேதியம் படைக்க முக்கியமாக இடம் பெறுவது இந்த தேங்காய் பால் பிரசாதம் ஆகும். அத்தகைய ஆடி மாத சிறப்புகளில் ஒன்றான தேங்காய் பால் ரெசிபி எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.