
அசைவ உணவு பிரியர்கள் பலரும் மீன் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். அவர்கள் மீனில் பலவகையான ரெசிபிகள் செய்து சாப்பிடுவார்கள். மீன் சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என்று நம் அனைவருக்கும் தெரியும். மீன் உலகின் மிகவும் சத்தான உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் மீனில் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
அந்த வகையில் நீங்கள் மீன் பிரியரா? அப்படியானால் நீங்கள் மழைக்காலத்தில் மீன் போன்ற பிற கடல் உணவுகளை சாப்பிடுபவரா? அப்படி நீங்கள் சாப்பிட்டால் அது குறித்து ரொம்பவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் மழைக்காலத்தில் மீன் போன்ற கடல் உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஏனெனில் மழைக்காலத்தில் கடல்கள், ஆறுகள் குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் அழுக்காகி பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் வைரஸ்கள் அவற்றில் இருக்கும். இதனால் கடல் உயிரினங்கள் மோசமான கிருமிகளுக்கு எளிதில் ஆளாகின்றன. அத்தகைய சூழ்நிலையில் அழுக்கு இருக்கும் மீன்களை சாப்பிட்டால் நாம் எளிதில் நோய்வாய்ப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது இதனால் தான் மழைக்காலத்தில் மீன் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதையும் மீறி சாப்பிடுபவர்களுக்கு உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: கொலஸ்ட்ரால் குறையணுமா? அப்படின்னா இந்த 5 வகை மீன்களை சாப்பிடுங்க!!
மழை காலத்தில் மீன் சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவுகள் :
1. உணவு ஒவ்வாமை
மீன்களின் உடலில் அதிக அளவு முட்டை மற்றும் கொலஸ்ட்ரால் இருப்பதால் இதை சாப்பிடும் போது உணவு ஒவ்வாமை பிரச்சனை ஏற்படுகிறது. உணவு ஒவ்வாமை பிரச்சினையால் தொண்டை தொற்று, தொண்டை வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
2. செரிமான பிரச்சனை
பொதுவாகவே மழை காலத்தில் நம்முடைய செரிமான அமைப்பு பலவீனமாகவே இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் மீன் போன்ற கனமான உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். இதனால் அஜீரணக் கோளாறு, வயிற்று வலி, வயிற்று வீக்கம் போன்ற வயிற்று சம்பந்தமான பிரச்சினைகளுக்கு வழிவகும்.
3. ஃபுட் பாய்சன்
பொதுவாக மழைக்காலங்களில் குளங்கள் ஆறுகள் போன்ற நீர் நிலைகளில் பல வகையான தீங்கு விளைவிக்கும் வைரஸ்கள் பாக்டீரியாக்கள் தங்கும் அத்தகைய சூழ்நிலையில் மீன் போன்ற கடல் உணவுகளை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
4. மீன் முட்டை
மழை காலம் தான் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால், மீனின் வயிற்றில் முட்டைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே மீனுடன் அதன் முட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் அபாயம் உள்ளது.
5. பழைய மீன்
சில சமயங்களில் மழைக்காலத்தில் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகரிப்பால் சில பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருக்கும். எனவே, இந்த மாதிரியான பிரச்சினைகளைத் தவிர இருக்க மீன் தேவைகளை பூர்த்தி செய்ய முன்கூட்டியே மீன்களைப் பிடித்து பதப்படுத்தி வைத்திருப்பார்கள். இதனால் அவை ஊட்டச்சத்துக்களை இழக்கிறது. மேலும் இந்த மாதிரியான மீன்களை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
6. ஒட்டுண்ணி தொற்று
மழைக்காலத்தில் நீர்நிலைகளில் ஒட்டுண்ணிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மேலும் அவை மீன் போன்ற கடல் உணவுகளில் இருக்கும். எனவே மீன் சாப்பிடும் போது அவற்றில் இருக்கும் ஒட்டுண்ணி தொற்றுக்களை ஏற்படுத்தும்.
7. டைபாய்டு வரலாம்
மழைக்காலத்தில் நீர் மாசு அதிகமாக இருப்பதால் எவ்வளவு தான் மீனை கழுவி சமைத்தாலும் அவற்றில் இருக்கும் அழுக்குகள் எளிதில் நீங்காது. எனவே அவற்றை சாப்பிட்டால் டைபாய்டு வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதையும் படிங்க: மீன் எல்லோருக்கும் நல்லதல்ல.. இந்த '7' மீன்களை 'கர்ப்பிணிகள்' சாப்பிடக் கூடாது!!