இந்த இடத்தில் எண்ணெய் தடவினால் போதும்! செரிமான பிரச்சனைக்கு 30 நாட்களில் தீர்வு!

First Published | Oct 28, 2024, 11:35 AM IST

செரிமானக் கோளாறுகளுக்கு இயற்கையான தீர்வாக தொப்புளில் எண்ணெய் தடவுவது நல்லது. செரிமானத்தை மேம்படுத்தவும், வயிற்று வலியைக் குறைக்கவும் உதவும். எந்தெந்த எண்ணெய்களை தொப்புளில் தடவலாம் என்று பார்க்கலாம்.

Digestion Problems

மோசமான உணவு காரணமாக தற்போது உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக ஆரோக்கியமற்ற ஜங்க் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, பலருக்கு குடல் பிரச்சினைகள் உள்ளன. இதில் அஜீரணம், வயிற்றை சரியாக சுத்தம் செய்ய முடியாமை, வயிற்றுப் பிடிப்புகள், வாயு மற்றும் வீக்கம் போன்றவையும் அடங்கும்.

இதுபோன்ற சூழ்நிலையில், மருந்துகளை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, இயற்கையான முறையில் வயிற்று வலியைக் குணப்படுத்தலம். ஆம். உங்கள் தொப்புளில் தினமும் தடவக்கூடிய 4 எண்ணெய்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இதன் மூலம் உங்கள் செரிமானத்தை மேம்படுத்தும், செரிமானம் தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்கும். வயிற்றை ஆரோக்கியமாக்கும்.

Oil For Navel

தேங்காய் எண்ணெய்

தொப்புளில் தேங்காய் எண்ணெயை தடவுவதால் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது, இது செரிமான அமைப்பை குளிர்விக்கிறது. அத்துடன் வயிற்றுக்கு நன்மை பயக்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது.

கடுகு எண்ணெய்

வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும் கடுகு எண்ணெய் மிகவும் நன்மை பயக்கும். நீங்கள் அதை உணவில் பயன்படுத்தலாம். மேலும் தினமும் 2 சொட்டு கடுகு எண்ணெயை உங்கள் தொப்புளில் போடலாம், இது செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது.

குழந்தைகளுக்கு பால் நல்லதா? தயிர் நல்லதா? தெரிஞ்சுக்க இதை படிங்க!

Latest Videos


Oil For Navel

ஆலிவ் எண்ணெய்

தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு துளி ஆலிவ் எண்ணெயை தொப்புளில் போட்டு வந்தால், வயிற்றில் வாயு உருவாவது, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

நெய்

சுத்தமான நெய்யை தொப்புளில் தடவுவதால் செரிமான மண்டலம் மேம்படும், வயிற்றுப் பிடிப்பு மற்றும் வாயு பிரச்சனை இருக்காது.

Oil For Navel

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

தொப்புளில் எண்ணெய் அல்லது நெய் தடவுவது செரிமான அமைப்பை மேம்படுத்துவது மட்டுமல்ல. இது தவிர, தொப்புளில் எண்ணெய் தடவினால் வயிற்று தசைகள் தளர்ந்து, எரியும் உணர்வு மற்றும் வயிற்றில் வலி குறையும்.

அதுமட்டுமின்றி தினமும் தொப்புளில் எண்ணெய் அல்லது நெய் தடவி வந்தால் வயிற்றின் உள் வீக்கமும் குறையும். தினமும் இரவில் படுக்கும் முன் தொப்புளில் எண்ணெய் தடவலாம் அல்லது வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை தடவலாம். எனினும் புதிதாக எந்த செயல்முறையையும் தொடங்கும் முன் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம். மருத்துவ ஆலோசனையின்றி செய்யும் விஷயங்கள் சில நேரங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

சர்க்கரை நோய்  கட்டுக்குள் வர.. ஈஸியான வழி இருக்கு.. 'இப்படி'  வாக்கிங் போனா போதும்!!

click me!