Ac Coach Blankets
நம்மில் பலரும் நிச்சயம் ஒருமுறையாவது ரயில் பயணம் மேற்கொண்டிருப்போம். ரயில் பயணிகளுக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளையும் சலுகைகளையும் செய்து வருகிறது. ஒவ்வொரு ரயிலிலும் பல ஏசி பெட்டிகள் உள்ளன, அதில் பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் உள்ளன. ஆனால், ஏசி பெட்டிகளில் உள்ள வசதிகள் குறித்து ரயில்வே சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது ஏசி பெட்டிகளில் பயன்படுத்தப்படும் படுக்கை விரிப்புகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமையின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
நீங்கள் ஏசி கோச்சில் பயணிக்கும்போது, ஒவ்வொரு இருக்கையிலும் கருப்பு நிற கம்பளி போர்வை தலையணைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்படும். வெள்ளை நிறத்தில் இருக்கும் படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணைகள் சுத்தமாக இருக்கும். ஆனால் கருப்பு நிறத்தில் இருக்கும் கம்பளி போர்வை துவைக்கப்பட்டதா என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும் இந்திய ரயில்வே உங்களின் இந்தக் குழப்பத்தை நீக்கியுள்ளது.
Ac Coach Blankets
படுக்கை விரிப்புகள் மற்றும் போர்வைகள் எப்போது துவைக்கப்படுகின்றன?
ஏசி பெட்டிகளில் பயன்படுத்தப்படும் வெள்ளை நிற படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள் ஒவ்வொரு முறை பயன்படுத்தப்பட்ட பிறகும் துவைக்கப்பட்டு, அதன் பின்னரே யணிகளுக்கு மறுபயன்பாட்டிற்கு தரப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரம் கருப்பு நிற கம்பளிப் போர்வைகள் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
குறைந்த செலவில் சபரிமலைக்கு போகலாம்.. ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ரயில்வே
Ac Coach Blankets
படுக்கை விரிப்புகளுக்கு தனியாக பணம் வசூலிக்கப்படுகிறதா?
இந்த பெட்ஷீட்கள், தலையணைகள் மற்றும் போர்வைகளுக்கு பயணிகளிடம் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று ரயில்வேயிடம் கேட்டபோது, அவர்களின் கட்டணமும் டிக்கெட் கட்டணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று ரயில்வே தெளிவாக கூறியது. கரிப் ரத் மற்றும் துரந்தோ போன்ற ரயில்களில் மட்டும், பயணிகளுக்கு பெட்ஷீட் மற்றும் போர்வைகள் தனித்தனியாக வழங்கப்படுகின்றன.
அதற்கு அவர்கள் சிறிது கட்டணம் செலுத்த வேண்டும். துரந்தோ போன்ற ரயில்களில் இவற்றை சுத்தம் செய்வதற்கு முறையான தரநிலைகள் பின்பற்றப்படுவதாக ரயில்வே அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வீட்டு பராமரிப்பு மேலாண்மை துறையின் பிரிவு அதிகாரி ரிஷு குப்தா தெரிவித்தார்.
Ac Coach Blankets
ஒவ்வொரு பயணத்திற்கும் பிறகு என்ன நடக்கும்?
இந்த விவகாரம் தொடர்பான அதிகாரி ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு அளித்த பதிலில் கூறுகையில், ஒவ்வொரு ரயில் பயணத்திற்குப் பிறகும், பெட்ஷீட்கள் மற்றும் தலையணை கவர்கள் சலவைக்கு அனுப்பப்படும், அதே நேரத்தில் போர்வைகள் மடித்து பெட்டியிலேயே சேமிக்கப்படும். அது மிகவும் அழுக்காகவும், துர்நாற்றமாகவும் இருந்தால், போர்வை சலவைக்கு அனுப்பப்படும். போர்வைகளில் கறை இருந்தால் அல்லது துர்நாற்றம் வீசத் தொடங்கினால் மட்டுமே போர்வைகள் துவைக்கப்படுகின்றன. ” என்று கூறினார்.
2017-ம் ஆண்டு சிஏஜி தனது அறிக்கையில் ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டது. சில சமயங்களில் போர்வைகள் 6-6 மாதங்களுக்கு ஒருமுறை துவைக்கப்படுகின்றன என்று சிஏஜி தனது விசாரணையில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் டாப் 10 பழமையான ரயில் நிலையங்கள்! தமிழ்நாட்டிலும் 2 ஸ்டேஷன் இருக்கு!