
பொதுவாகவே நாம் அனைவரும் இரவு தூங்கும்போது கண்டிப்பாக தலையணை பயன்படுத்துவது உண்டு. தலையணை தலைக்கு சற்று உயரத்தை அளிப்பதால் இது தூங்குவதற்கு மிகவும் வசதியாக இருக்கும். ஆனால் தலையணை தலையணை வைத்து தூங்குவது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் தெரியுமா?
நம்முடைய முன்னோர்கள் காலத்தில் தலையணை இல்லாமல் வெறும் தரையில் தான் தூங்குவார்கள். அதிக பட்சம் அவர்கள் தலைக்கு கீழே ஒரு துண்டு அல்லது ஏதாவது ஒரு துணியை வைத்து தான் தூங்குவார்கள். இதனால் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் தலையணை பயன்படுத்துவதால் நன்மைகள் கிடைப்பதில்லை. அதனால் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படுகிறது. மேலும் தலையணை வைத்து நாம் தூங்கும்போது நம்முடைய உடல் உறுப்புகள் வெவ்வேறு வழிகளில் பாதிக்கப்படுகிறது தெரியுமா? இதனால் தான் தலையணை இல்லாமல் தூங்கு வேண்டும் என்று மருத்துவர்கள் கூட அறிவுறுத்துகிறார்கள். எனவே இந்த பதிவில் தலையணை இல்லாமல் தூங்குவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: ஆழ்ந்த தூக்கம் வரலயா? இந்த 5 தவறுகள் தான் காரணம்!! உடனே மாத்துங்க!!
மன அழுத்தம் நீங்கும் :
தலையணை வைத்து தூங்கும் போது மன அழுத்தம் உருவாகும். நீங்கள் தூங்கும் போது மன அழுத்தம் அல்லது பதட்டமாக இருந்தால் தலையணை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். தலையணை வைத்து தூங்கும் போது மன அழுத்தம் இன்னும் அதிகமாகும். எனவே மன அழுத்தத்திலிருந்து விடுபட தலையணை இல்லாமல் தூங்குங்கள்.
தலைவலி வராது
தலையணை வைத்து தூங்கினால் தலைக்கு சரியான ரத்த ஓட்டம் கிடைக்காமல் போகும். இதன் காரணமாக நரம்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் சரியாக கிடைக்காது. மேலும் இதனால் தலைவலியும் ஏற்படும். எனவே தலையணை இல்லாமல் தூங்கினால் தலைவலி வராது.
இதையும் படிங்க: ஸ்வெட்டர், சாக்ஸ் குளிரை தாங்கும்.. ஆனா அதை அணிந்தபடி தூங்கக் கூடாது தெரியுமா?
சரும பிரச்சனைகள் வராது:
தலையணை வைத்து தூங்கும் போது பல சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். எப்படியெனில், தலையில் இருக்கும் அழுக்குகள் தலையணையில் தங்கும். இதனால் அது உங்கள் முகத்தில் பட்டு முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில் தலையணை இல்லாமல் தூங்கினால் முகப்பரு பிரச்சனை வரவே வராது.
நிம்மதியாக தூங்கலாம்:
தலையணை வைத்து தூங்கும் போது தூக்கமின்மை பிரச்சனை வருவது பொதுவானது. நீங்கள் இரவு தூங்கும் போது உங்களுக்கு சரியாக தூக்கம் வரவில்லை என்றால் இன்றிலிருந்து தலையணை இல்லாமல் தூங்கப் பழகுங்கள். இதனால் இரவு நீங்கள் நிம்மதியாக தூங்குவீர்கள் மற்றும் மறுநாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும் இருப்பீர்கள்.
முதுகு வலி வராது:
நாம் தலையணை வைத்து தூங்கும் போது நம்முடைய முதுகு தண்டும், தலையும் ஒரே மாதிரியாக இருக்காது. அதுவும் குறிப்பாக தலையணை உயரமாக இருந்தால் முதுகெலும்பு வளைந்து காணப்படும். இதன் காரணமாக உடலில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். அதாவது இரவு தலையணையில் தூங்கும் போது காலையில் எழுந்தவுடன் முதுகு வலி, உடல் விறைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே இந்த மாதிரியான பிரச்சினைகளைத் தவிர்க்க தலையணை இல்லாமல் தூங்குவது தான் நல்லது. இதனால் தலையும் மற்றும் முதுகெலும்பும் ஒரே நிலையில் இருக்கும்.மேலும் இதனால் முதுகு வலி வராது.