
ஒருவருடைய முக அழகில் பற்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. வெண்மையான பற்கள் தான் உங்களுடைய சிரிப்பை கூடுதல் அழகாக்கும். மஞ்சள் பற்கள் உங்களுடைய தன்னம்பிக்கை குறைக்கலாம். மற்றவர்கள் கேலி செய்வார்களோ என்ற எண்ணத்தை கொடுக்கலாம். மஞ்சள் கறையுள்ள பற்களை வைத்து கொண்டு மனதார புன்னகைக்க கூட முடியாது. உங்களுடைய கூச்சத்தை போக்கி மஞ்சள் பற்களை எப்படி ஜொலிக்கும் முத்துக்களைப் போல வெண்மையாக மாற்றுவது என இந்த பதிவில் காணலாம்.
ஒருவர் தினந்தோறும் பல் துலக்கினால் கூட அவருடைய பற்கள் மஞ்சளாக மாற வாய்ப்புள்ளது. இது மக்களிடையே காணப்படும் பொதுவான பிரச்சனையாக மாறி வருகிறது. உங்களுடைய பற்கள் மஞ்சளாக மாற பல்வேறு காரணங்கள் உள்ளன. இதிலிருந்து விடுபட பலர் ஆயிரக்கணக்கில் செலவு செய்கின்றனர். ஆனால் எந்த செலவும் செய்யாமல் வீட்டிலேயே உங்களுடைய பற்களை வெண்மையாக மாற்ற சில குறிப்புகள் உள்ளன. இதற்கு ஒரு வாழைப்பழ தோல் மட்டுமே போதுமானது. வாழைப்பழம் உங்களுடைய உடல் நலத்திற்கு நல்லது என அறிந்திருப்பீர்கள். ஆனால் அதனுடைய தோலை வைத்து உங்கள் பற்களை வெண்மையாக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
இதையும் படிங்க: பல் ஈறுகளில் இரத்தம் கசிவா? அப்ப தினமும் காலை 'இத' செய்ங்க..
வாழைப்பழத் தோலை கொண்டு சருமத்தை ஈரப்பதமாக வைக்க ஃபேஸ் பேக் பயன்படுத்தலாம். இது தவிர பற்களை வெண்மையாக்கவும் அவை உதவுகின்றன. வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனிஸ் ஆகிய தாதுஉப்புக்கள் காணப்படுகின்றன. இதன் தோலை பயன்படுத்துவது பற்களை எந்த அழுக்கும் இன்றி சுத்தம் செய்ய உதவுகிறது. வாழைப்பழத் தோலை சரியான பொருட்களுடன் பயன்படுத்தும் போது அதனுடைய பயன்கள் இரண்டு மடங்காக கிடைக்கும். மஞ்சள் கறை படிந்த பற்களை வெண்மையாக மாற்ற வாழைப்பழத்துடன் என்னென்ன பொருட்களை சேர்க்க வேண்டும் என இங்கு காணலாம்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு ஏற்ற 'ஜீரோ' கெமிக்கல் பல்பொடி'.. 10 கிராம்பு இருந்தா வீட்டில் தயார் செய்யலாம்!!
பற்களை வெண்மையாக்கும் டிப்ஸ்!
வாழைப்பழ தோலின் வெண்மையான பகுதியால் பற்களில் மென்மையாக தேய்த்துவிடுங்கள். இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வாழைப்பழத்தோலினால் பற்கள் மீது தேய்க்க வேண்டும். இந்த செயல்முறைக்கு பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வழக்கமான பற்பசையால் பற்களைத் துலக்குங்கள். இது பற்களை வெண்மையாக்க உதவும்.
இந்த செயல்முறையுடன் சமையல்சோடா, சில துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து அதை பிரஷால் பற்களில் தேய்க்கலாம். பின்னர் வாழைப்பழத் தோலை வைத்தும் மஞ்சள் கறை படிந்த பற்கள் மீது மெதுவாக தேய்க்கலாம். இப்படி இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் பற்களை மென்மையாக தேய்த்தால் மஞ்சள் கறை நீங்கிவிடும். இதற்கு பின்னர் வழக்கமான பற்பசையால் பல் துலக்க வேண்டும்.
இந்த கலவை எவ்வாறு உதவுகிறது?
வாழைப்பழத் தோலில் உள்ள தாதுக்கள் பற்களின் மேற்புறம் படிந்துள்ள அழுக்குகளையும் மஞ்சள் கறையையும் நீக்க உதவுகிறது. இதனை பயன்படுத்தும் பற்கள் வெண்மையாகும் சாத்தியம் உள்ளது. சமையல் சோடா இயற்கையிலே ஒரு ஒயிட்னர் போல செயல்படக்கூடியது. இது பற்களில் உள்ள கறைகளை நீக்க உதவுகிறது. எலுமிச்சையில் காணப்படும் அமிலங்கள் பற்களில் உள்ள கறையை அகற்றி அதனை ஜொலிக்க செய்கிறது.
எப்போது செய்ய வேண்டும்?
இந்த முறையை தினமும் செய்யக்கூடாது. ஒரு வாரத்தில் இரண்டு முறை செய்யலாம். எலுமிச்சை பழத்தை பற்களின் மீது அதிகமாக பயன்படுத்தினால் பாதிப்பை உண்டாக்கும் அபாயமுள்ளது. இதனால் பற்சிப்பி அடுக்குகளை பாதிப்பை உண்டாக்கும். ஒவ்வொரு தடவை பற்களை இது மாதிரி சுத்தம் செய்யும் போதும் புதிய வாழைப்பழத் தோலை பயன்படுத்த வேண்டும். இந்த முறையை செய்து முடித்த பின்னர் வழக்கம் போல பற்பசையை பயன்படுத்தி பற்களை துலக்குவது அவசியம். அப்போதுதான் வாய் சுகாதாரம் நன்றாக இருக்கும்.