
சப்பாத்தி நம் அன்றாட உணவில் ஒரு பகுதியாகும். சொல்லபோனால் நம்மில் பலரும் விரும்பி சாப்பிடும் உணவில் இதுவும் ஒன்றாகும். இதை சாப்பிடுவதால் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் கிடைக்கும். அதனால் தான் பலர் ஒரு நாளைக்கு இரண்டு வேளை சப்பாத்தி சாப்பிடுகிறார்கள். சப்பாத்தியில் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், நீண்ட நேரம் ஆனா பிறகு அது அதன் மென்மையை இழக்கிறது. இதனால் சாப்பிடுவதற்கு கடினமாகவும் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், சப்பாத்தி நீண்ட நேரம் ஆனாலும் சாஃப்டாக வைத்திருக்க சில குறிப்புகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
எண்ணெய்க்கு பதில் நெய்: சிலர் சப்பாத்தி மென்மையாக இருக்க மாவு பிசையும் போது எண்ணெய் மற்றும் உப்பு சேர்ப்பார்கள். இதனால் சப்பாத்தியின் சுவை சற்று வித்தியாசமாக இருப்பது மட்டுமின்றி, சிறிது நேரமான பிறகு கடினமாகிவிடும். எனவே, நீண்ட நேரம் ஆனாலும் சப்பாத்தி சாப்பிடுவதற்கு சுவையாகவும், சாஃப்டாகவும் இருக்க எண்ணெய்க்கு பதிலாக நீங்கள் நெய் பயன்படுத்துங்கள். நீங்கள் சுடும் சப்பாத்தியை நீண்ட நேரம் சாஃப்டாக வைத்திருக்கும். அதுமட்டுமின்றி எண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயன்படுத்தினால் அது ஆரோக்கியத்திற்கும் நல்லது.
அளவான தண்ணீர் : அவசரத்தில் மாவு பிசையும் போது நம்மில் பெரும்பாலானோர் அதிகமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து விடுகிறோம். இதனால் சப்பாத்தி சீக்கிரமாகவே கடினமாகிவிடும். எனவே மாவு பிசையும் போது போதிய அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி நீண்ட நேரம் சாஃப்டாக இருக்கும்.
இதையும் படிங்க: Kitchen Tips : ஃப்ரிட்ஜில் வைத்த சப்பாத்தி மாவு கருப்பாக மாறாமல் இருக்க சூப்பரான டிப்ஸ் இதோ!
பால் அல்லது சூடான நீர் : சப்பாத்தி மாவு செய்யும் போது அதில் தண்ணீருக்கு பதிலாக பால் அல்லது சூடான நீர் சேர்க்கும் பிசையலாம். குறைந்தது 15 நிமிடங்களாவது மாவை பிசைய வேண்டும். பிறகு சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போட்டு எடுத்தால் சப்பாத்தி சாஃப்டாக வரும். அதுமட்டுமின்றி நீண்ட நேரம் சாஃப்டாகவும் இருக்கும்.
பிளவு இருக்கவே கூடாது : நீங்கள் சப்பாத்தியை சப்பாத்தி கட்டையில் வைத்து உருட்டும்போது அதில் பிளவுகள் இல்லாமல் இருக்க வேண்டும். பிளவுகள் இருந்தால் சப்பாத்தி சீக்கிரமாகவே கடினமாகிவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: சப்பாத்தியும், சாதமும் ஒன்றாக சேர்த்து சாப்பிடவே கூடாதாம்... மீறினால் என்ன ஆகும் தெரியுமா..?
சப்பாத்தி சுடும் முறை : சப்பாத்தியை நீங்கள் சுடும்போது அவற்றின் மேல் பகுதியில் பபுள்ஸ் வந்தவுடன் உடனே அடுத்த பக்கம் திருப்பி போட்டு விடுங்கள். பிறகு அதன் மேற்பரப்பில் எண்ணெய் தடவும். இந்த முறையில் நீங்கள் சப்பாத்தி சுட்டால் சப்பாத்தி நீண்ட நேரம் சாப்டாகவே இருக்கும்.
நினைவில் கொள் :
- முக்கியமாக சப்பாத்தியை ஒவ்வொன்றாக சுட்டு அடுக்கி வைக்கும் போது அதன் மேல் மெய் தடவி வையுங்கள். இதனால் சப்பாத்தி ஈரப்பதத்தை இழக்காது.
- அதுபோலவே சப்பாத்தியை நீங்கள் அலுமினியத்தாள், ஜிப் லாக் பை போன்றவற்றில் வைக்கவும். இதனால் சப்பாத்தி நீண்ட நேரம் சாப்டாகவே இருக்கும்.