Gooseberry
நெல்லிக்காய்:
கல்லீரலைப் பொறுத்த வரையில், நெல்லிக்காய் வரப்பிரசாதம் எனலாம். ஏனெனில் கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதால் நன்மை பயக்கும். நெல்லியில் வைட்டமின் C , ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. எனவே இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், இது செரிமான பாதிப்பு, நீரிழிவு, அஜீரணம், கண் பிரச்சினைகள் மற்றும் கல்லீரல் பலவீனத்தை எதிர்த்துப் போராடுகிறது. இதனை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையும்.
Gooseberry
செய்முறை:
1. நெல்லிக்காயைத் தோல் சீவி மிக்ஸியில் போட்டு, கூடவே இஞ்சி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.
2. இதில், உப்பு, துளசி, புதினா இலைகள் சேர்த்து அருந்தலாம். இல்லையென்றால், அரைத்த ஜூஸை வடிகட்டி அதில், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வரவும்.
3. நெல்லிக்காய் பவுடர் தற்போது சந்தைகளில் கிடைக்கிறது. ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை எடுத்து தண்ணீருடன் புதினா, கறிவேப்பிலை சேர்த்து உட்கொள்ளவும்.