இந்த மரத்தில் இருந்து எடுக்கப்படும் பிசினி ஒளிப்புகும் தன்மையும், எளிதில் எரியக்கூடிய தன்மையும் கொண்டு சாம்பிராணியாக மாறுகிறது. இந்தியாவை பொறுத்த வரை குஜராத் அசாம், ராஜஸ்தான், பீகார், ஒடிசா, தமிழ்நாட்டில் இந்த சாம்பிராணி மரங்கள் காணப்படுகின்றன. தீக்குச்சி தயாரிப்பிலும் சாம்பிராணி மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சரி, சாம்பிராணியால் உடலுக்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இதுகுறித்து பிரபல மருத்துவரும், இரைப்பை குடல் நோய் நிபுணரும் டாக்டர் வி. ஜி. மோகன் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “ சாம்பிராணி என்பது மிகவும் முக்கியமான விஷயம். இது 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆயுர்வேதத்தில் சாம்பிராணி பயன்படுத்துகிறது. உடலில் உள்ள வீக்கத்தையும், மூட்டு வலியையும் குறைக்ககூடிய சக்தி சாம்பிராணிக்கு இருக்கிறது. இது பல ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.