தீபாவளி வரப்போகிறது. தீபாவளிக்கு முன்னதாக அனைவரும் தங்களது வீடுகளை சுத்தம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் நாம் வீட்டை மட்டுமே சுத்தம் செய்கிறோமே தவிர, நாம் படுக்கும் மெத்தையை சுத்தம் செய்ய மறந்து விடுகிறோம்.
மெத்தையை தினமும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் மாதத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் மெத்தையில் நம்முடைய வியர்வையால் அழுக்கு, பாக்டீரியா, கிருமிகள் உருவாகும். இவை நம்முடைய ஆரோக்கியத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில், சிலர் மெத்தையை மொட்டை மாடி அல்லது பால்கனியில் வெயிலில் காய வைப்பார்கள். இன்னும் சிலரோ காய வைப்பதற்கு கூட சிரமப்படுவார்கள். இதனால் மெத்தையில் இருந்து ஒரு விதமான துர்நாற்றம் வீசும். அதுவும் குறிப்பாக மழை, குளிர் காலங்களில் இந்த துர்நாற்றம் அதிகமாகும். எனவே மெத்தையை சுத்தம் செய்வதற்கும், மெத்தையில் இருக்கும் கறைகளை சுலபமாக அகற்றுவதற்கும் ஆண்கள் பயன்படுத்தும் ஷேவிங் கிரீம் கொண்டு எளிதில் சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: மழை வர போது.. துண்டுகள், பெட்ஷீட்களில் துர்நாற்றம் அடிக்காமல் இருக்க சிம்பிளான 10 டிப்ஸ்!!
ஷேவிங் கிரீம் கொண்டு மெத்தையை சுத்தம் செய்வது எப்படி?
இதற்கு முதலில், மெத்தையில் இருக்கும் தூசிகளை கிளீனர் அல்லது வேறு ஏதாவது கொண்டு அகற்றி விடுங்கள். இப்போது ஷேவிங் கிரீமை மெத்தையில் இருக்கும் கறைகள் மீது தடவி சுமார் 15-30 நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும். ஷேவிங் கிரீம் அதிகமாக எடுக்க வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு மென்மையான பிரஸ் அல்லது துணி கொண்டு துடைத்து எடுக்கவும்.
இப்போது ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் மற்றும் வெள்ளை வினிகர் சேர்த்து அதை மெத்தையில் கறைகள் படிந்த இடத்தில் தெளிக்கவும். ஆனால் அதிகமாக தெளிக்க வேண்டாம். பிறகு மெத்தையை காய வைக்கவும். ஹேர் டிரையர் கொண்டு கூட மெத்தையை உலர்த்தலாம். இப்போது நீங்கள் பார்த்தால் மெத்தையில் கறைகள் நீங்கி பார்ப்பதற்கு புதியது போல் இருக்கும்.
ஷேவிங் கிரீம் ஏன் பயன்படுத்துகிறோம்?
சேவிங் கிரீம்களில் தண்ணீர் மற்றும் லேசான சோப்பு ஏஜெட்டுகள் இருப்பதால் அவை கறைகளை நீக்கி மெத்தையை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் அதன் மென்மையின் காரணமாக துணியில் உறிஞ்சப்பட்டு, கறைகளை தளர்த்த உதவுகிறது. இது தவிர ஷேவிங் கிரீம் ஆனது எளிதில் முறைத்து விடும். அதாவது கறைகள் மீது ஸ்கப் செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும் மெத்தையை சேதப்படுத்தும் அபாயத்தையும் குறைக்கும்.
இதையும் படிங்க: மெத்தை வாங்க நினைக்கிறீர்களா? அப்ப முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க..இல்லையெனில் நீங்கள் நோய்வாய்ப்படலாம்!