Salmon Fish: சால்மன் மீன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா..? அடடே...இவ்வளவு நாள் தெரியாம போச்சே..!

Published : Sep 29, 2022, 10:57 AM IST

Salmon Fish: சால்மன் மீன்கள் சாப்பிடுவதால், உடலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

PREV
15
Salmon Fish: சால்மன் மீன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா..? அடடே...இவ்வளவு நாள் தெரியாம போச்சே..!
salmon

சால்மன் மீன்களின் அறிவியல் பெயர் சால்மோ ஆகும். இவை நன்னீர் மீன்களாகும். சால்மன் ஒரு நீல அல்லது கொழுப்பு நிறைந்த மீன் ஆகும், இது நூறு கிராம் இறைச்சிக்கு பதினொரு கிராம் கொழுப்பை வழங்குகிறது. சால்மன் மீன்கள் சாப்பிடுவதால் முடி, தோல் , மூட்டுகள் மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்கும். 
 

25
salmon

 

சால்மன் மீன்களின் பயன்கள்:

இதில் வைட்டமின்கள் , தாதுக்கள் மற்றும் முக்கியமாக ஒமேகா - 3 காணப்படுகின்றன. இது விந்தணுக்களின் தரம் மற்றும் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு நோய், மூட்டு வீக்கம், மன அழுத்தம், மூளை கோளாறுகள், தோல் கோளாறுகள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும், இதில் இருக்கும் வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் பி5 ஆகியவை இதயத்தை பாதுகாக்க உதவுகிறது.

 

35
salmon

இந்தியாவில் கிடைக்கும் பெரும்பான்மையான சால்மன் மீன்கள் உலகில் உள்ள பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை. நார்வே , கனடா மற்றும் ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில் சால்மன் வளர்ப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றிருப்பதால் உலகம் முழுக்க பயன்படுத்தப்படுகின்றது.  

45
salmon

இந்த சால்மன் மீன், பணக்கார மீன் என்றும் அழைக்கப்படுகிறது. இது அதிக கொழுப்பு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது, எனவே அதன் இறைச்சி மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் அதன் நிறம் வெள்ளை முதல் சிவப்பு வரை இருக்கும்.

எப்படி பதப்படுத்தி வைப்பது.?

சால்மன் மீன்களை உறைவிப்பானில் -4° செல்சியஸ்க்கு கீழே வெப்ப நிலை இருக்குமாறு பார்த்து வைக்க வேண்டும்.

55
salmon

எப்படி சமைத்து உண்ண வேண்டும்..?

சால்மன் மீன்களில் அதிக எண்ணெய் (high oil fish)இருக்கும். எனவே அதனை சுட்டும் சாப்பிடலாம், நீராவியில் வேகவைத்து மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம். மேலும் சால்மன் மாத்திரை, எண்ணெய் போன்ற வடிவங்களிலும் கிடைப்பதால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
 

Read more Photos on
click me!

Recommended Stories