Coffee: காலையில் வெறும் வயிற்றில் காபி குடிப்பதால்..புற்றுநோய் ஆபத்து குறையுமா..? புதிய ஆய்வு சொல்வது என்ன..?

First Published Sep 29, 2022, 8:02 AM IST

Coffee: காபி குடிப்பதால், பல நன்மைகள் இருக்கின்றன. குறிப்பாக, புற்றுநோய் ஏற்படுத்தும் ஆபத்தை காபி குறைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

நம்மில் பலருக்கு காலையில் எழுந்ததும் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். காலையில், காபி குடித்தால் நமக்கு எதோ ஒரு புதிய சக்தி கிடைத்தது போல் ஒரு பீல் கிடைக்கும். காபி குடிப்பதால், பல நன்மைகள் இருக்கின்றன. புற்றுநோய் ஏற்படுத்தும் ஆபத்தை காபி குறைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..?காலையில் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

மேலும் படிக்க...Trisha: 40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் திரிஷா...பொன்னியின் ராணி குந்தவையின் ஃபிட்னஸ் ரகசியம் இது தான்..!

சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு, ஒவ்வொரு நாளும் இரண்டு, மூன்று கப் காபி குடிப்பது புரோஸ்டேட் கேன்சருக்கான அபாயத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.மேலும், இது பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் முதலானவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணியாக காபி இருந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. 

காபி குடிப்பதால் உடலில் ஏற்படும் பிற நன்மைகள்:

சர்க்கரை மற்றும் பால் இல்லாத காபியை நாம் குடிக்கும் போது இரண்டாவது வகை நீரழிவு நோய் வருவது குறைகிறது. மேலும், தினமும் காபி பருகுவதால் மன அழுத்தம் குறைவதோடு, தொடர்ச்சியாக குடிக்கும்போது கீழ்வாதம் ஏற்படும் அபாயம் குறைவதும் தெரிய வந்துள்ளது. 

மேலும் படிக்க...Trisha: 40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் திரிஷா...பொன்னியின் ராணி குந்தவையின் ஃபிட்னஸ் ரகசியம் இது தான்..!


காபி உடலின் தசைகளை வலிமைப் பெற செய்யும் என்பதால் உடற்பயிற்சி செய்யும் முன் இதனை பருகுவது நல்லது. மேலும், காபி பொடியை சிறிதளவு ஆலிவ் ஆயில் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவினால் இறந்த செல்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் முகம் பளபளப்பாக மாற உதவும்.

காபி குடிப்பதால் உடலில்  அட்ரீனலின் அளவு அதிகரித்து நம்மை சுறுசுறுப்பு ஏற்பட்டு, தாம்பத்திய வாழ்கை மேம்படுத்த உதவியாக இருக்கும்.மேலும், இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது.

மேலும் படிக்க...Trisha: 40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் திரிஷா...பொன்னியின் ராணி குந்தவையின் ஃபிட்னஸ் ரகசியம் இது தான்..!

click me!