Kambu: கம்பு ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும்..? கம்பு தானியத்தில் இருக்கும் எக்கச்சக்க நன்மைகள்...

Published : Jul 28, 2022, 05:03 PM IST

Health benefits of Kambu: கம்பு நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. இவற்றில் இருக்கும் எண்ணற்ற நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

PREV
17
Kambu: கம்பு ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும்..? கம்பு தானியத்தில் இருக்கும் எக்கச்சக்க நன்மைகள்...

சமீப காலமாக சிறுதானியங்கள் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வைட்டமின்களும் எண்ணற்ற பயன்கள் கொண்டவை. இத்தகைய சிறுதானியங்களில் கம்பு முக்கியமானது. கம்பு நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க..தினமும் 1 கப் மாதுளை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் 5 பெஸ்ட் நன்மைகள்...கட்டாயம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..

 

27

எனவே, இன்றைய காலகட்டத்தில் அதன் பயன்பாடு அறிந்து பெரும்பாலானோர் தங்கள் அன்றாட உணவுகளில் சிறுதானியங்களை சேர்த்து வருகின்றனர். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். உடலை நோய் தாக்காமல் பாதுகாத்துகொள்ளும்.எனவே கம்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

37

கம்பில் இருக்கும் சத்துக்கள்:

கம்பில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, கம்பங்கூழ், கம்பம் புட்டு, கம்பம் ரொட்டி, கம்பம் தோசை, கம்பு அவுல் என ஏதேனும்ஒரு வழி முறைகளில் சோளத்தை உங்கள் உணவில் சேரத்துகொள்வது அவசியம்.

47
weight loss

 உடல் எடையினை குறைக்க உதவும்

கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உங்கள் உடல் எடையை  கட்டுக்குள் வைக்கும்.எனவே உடல் உடல் எடையினை குறைக்க விரும்புவார்கள் தினசரி விழி கம்பு சேர்த்து கொள்வது நல்லது. 

மேலும் படிக்க..தினமும் 1 கப் மாதுளை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் 5 பெஸ்ட் நன்மைகள்...கட்டாயம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..

57
Tips for control diabetics

சர்க்கரை நோய்:

தினசரி உணவில் அடிக்கடி கம்பு சேர்த்து கொள்வதால், நீரழிவு நோய்க்கு சிறப்பாக செயல்படுகிறது. கம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ்  சர்க்கரைநோய்  ஏற்படாமல் காக்க உதவும்.இதனால், பல்வேறு நோய்கள் தடுக்கப்படுகிறது.எனவே தினசரி கம்பு உணவில் கம்பு சேர்த்து கொள்வது நல்லது.

67
Constipation

மலச்சிக்கல் போக்க:

தவறான உணவு பழக்கங்களின் விளைவாக இன்றைய காலகட்டத்தில் மலசிக்கல் மிகவும் மோசமான பிரச்சனையாக கருதப்படுகின்றது. நார்ச்சத்து கம்பில் அதிகம் உள்ளதால், மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கிறது. எடையை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. மேலும், அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை உண்பதால், இரத்தத்திற்கு கார்போஹைட்ரேட் செல்ல வழிவகுக்கிறது.

மேலும் படிக்க..தினமும் 1 கப் மாதுளை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் 5 பெஸ்ட் நன்மைகள்...கட்டாயம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..

77

உயர் இரத்த அழுத்தம்:

கம்பில் அதிக அளவு கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம்  சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.எனவே தினமும் கம்பு உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.  மேலும் இது கெட்ட கொழுப்புகள் சேராமல் தடுப்பதால் இதய நாளங்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories