பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்
கோல்டன் தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. மஞ்சள் கலந்தத் தேன், உடலில் உள்ள தொற்று மற்றும் பாக்டீரியாவையும் அழிக்கும் திறன் கொண்டது. மேலும், வழக்கமான தேனில் இருப்பதைவிட பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், எரிச்சலைத் தணிக்கவும், சளி மற்றும் இருமலைப் போக்கவும் உதவுகிறது. மேலும், குழந்தைகளுக்கு வாந்தி, விக்கலை நிறுத்தப் பயன்படும்.
மொத்தத்தில் வெறும் தேனாக இருந்தாலும் சரி, மஞ்சள் கலந்த தேனாக இருந்தாலும் சரி, இரண்டுமே ஆரோக்கிய பண்புகளின் அடிப்படையில் சிறந்தவை. ஆனால், கோல்டன் தேனில் மஞ்சள் சேர்ந்திருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் சிறப்பாக பங்களிப்பை வழங்குகிறது.