உடலின் வெளிப்புறத்தில் காயம் அல்லது எரிச்சல் ஏற்படும் போது, நாம் எளிதாக அதை அறிந்து கொள்ளலாம். ஆனால், சிறுநீரகத்தில் கல் உருவானால், உடலில் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்
சிறுநீரக கல் பிரச்சனை இருக்கும் போது, சாதாரண வலியுடன் ஒப்பிடும்போது ஒருவருக்கு சிறுநீர் கழிக்கும் போது அதிகப்படியான வலி எரிச்சல், மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இதனால் சிறுநீரகத்தில் அடைப்பு ஏற்பட்டு அழுத்தம் அதிகமாகிறது. இதன் காரணமாக முதுகு மற்றும் வயிற்றில் பயங்கர வலி உணரப்படுகிறது.
மேலும் படிக்க..1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் குருவின் விசேஷ யோகம்..இன்று இந்த ராசிக்கு லட்சுமி தேவியின் அருள் உண்டு
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்
உங்கள் சிறுநீரக கல் உங்கள் சிறுநீர்க்குழாய் அல்லது சிறுநீர்ப்பையில் நுழைந்தால், சிறுநீர் கழிக்கும் போது வலியை உணரலாம். இந்த நோய்த் தொற்றானது மிகவும் வேகமாகப் பரவக்கூடியது. உங்கள் கிட்னி வரை பரவி விளைவுகளை அதிகப்படுத்தும். ஒரு சில சமயம் மிகப்பெரிய நோயாக மாறி பயமுறுத்தும். அப்படிப்பட்ட வலி உங்களுக்கு இருந்தால், உடனே ஒரு மருத்துவரை அணுக வேண்டும். உடனடியாக சிகிக்சை தேவை.
Health Tips
சிறுநீரில் இரத்தம்:
உங்கள் வயிற்றில் கல் இருந்தால், உங்கள் சிறுநீர் பாதையில் இரத்தம் வருவதற்கான அறிகுறி ஏற்படும். இது சிறுநீரகத்தில் கல் இருப்பதைக் குறிக்கிறது. நாம் தொற்றுநோய்களின் பிடியில் வரும்போது, வைரஸ் காரணமாக சிறுநீர் அதிக மஞ்சள் நிறமாக மாறுவது போல, இன்சுலின் அளவு காரணமாக சிறுநீரின் நிறம் மாறுகிறது.