Figs fruits: மூட்டு வலி, எலும்பு தேய்மானத்தை சரி செய்யும்...அத்தியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா..?

First Published Sep 14, 2022, 2:12 PM IST

Figs fruits: மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளுக்கு அத்தி ஒரு அருமருந்தாகும். மேலும் , இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். 

அத்திப்பழம் ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மூட்டு வலி, எலும்பு தேய்மானம், நீரிழிவு நோய், போன்ற பிரச்சனைகளுக்கு அத்தி ஒரு அருமருந்தாகும். தினமும், ஒரு உலர் அத்திப்பழம் சாப்பிடும் போது, 3 % கால்சியம் நமக்கு கிடைக்கிறது. 

பெரும்பாலான மக்கள் அவற்றை உலர்பழங்களாக சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். ஊறவைத்த 3 அத்திப்பழங்களை தினமும் சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொண்டால் பல நோய்கள் விலகும்.

மேலும் படிக்க ..வீட்டில் தரித்திரம் நீங்கி, செல்வம் செழிக்க...இந்த ஒரு பொருளை மட்டும் எறும்புக்கு தானம் கொடுத்து பாருங்களேன்..

figs

அத்திப்பழத்தில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்

இதில் வைட்டமின் சி மற்றும் இ அதிகம் உள்ளன. அத்திப்பழத்தில் ஆன்டி ஆக்சிடன்கள் அதிகள் உள்ளதால் ரத்த  குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. 

மேலும் படிக்க ..வீட்டில் தரித்திரம் நீங்கி, செல்வம் செழிக்க...இந்த ஒரு பொருளை மட்டும் எறும்புக்கு தானம் கொடுத்து பாருங்களேன்..

இது தவிர இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின்கள், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. குறிப்பாக, தொடர்ந்து அத்திப்பழத்தை சாப்பிடும் ஆண்களின் முகத்தில் சுருக்கங்கள் இருக்காது. கூடுதலாக, ஆண்களின் விந்துக்களின் தரத்தை மேம்படுத்துகிறது.
 

உடல் எடை கட்டுப்படுத்தும்:

துத்தநாகம், நார்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு போன்ற தாதுக்கள் அத்திப்பழத்தில் (Healthy Fruit) காணப்படுகின்றன. இது நாள் முழுவதும் உங்கள் பசியையும் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் எடை அதிகரிப்பதைத் தடுக்க முடியும்.

Constipation

மலசிக்கல், செரிமானம் பிரச்சனயை போக்கும்:

இதில் நார்சத்து, நிறைந்திருப்பதால் மலசிக்கல், செரிமானம் பிரச்சனயை போக்கவும் இது உதவுகிறது. காலையில் அத்திப்பழங்களை ஊறவைத்து சாப்பிடுவது குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. அத்திப்பழத்தில் கரையக்கூடிய நார் மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ளது. இது ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க உதவுகிறது.

எப்படி சாப்பிடலாம்..?

உலர்ந்த அத்திப்பழங்களை தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

இல்லையென்றால், இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னதாக, அத்திப்பழத்தை பாலில் கலந்து சாப்பிடலாம். இஇது உங்களை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

மேலும் படிக்க ..வீட்டில் தரித்திரம் நீங்கி, செல்வம் செழிக்க...இந்த ஒரு பொருளை மட்டும் எறும்புக்கு தானம் கொடுத்து பாருங்களேன்..

click me!