Eating cloves: தினமும் இரண்டு கிராம்பு மட்டும் உணவில் சேர்த்து கொள்வதால், உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
இந்திய சமையலறைகளில் இருக்கும் மசாலா வகைகளில் கிராம்புவிற்கு தனி இடம் உண்டு. இது வெவ்வேறு உணவு வகைகளில் சேர்க்கும் போது அந்த உணவுக்கு தனி சுவை மற்றும் மணம் அளிக்கிறது. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. ஆண்களுக்கு விந்து வெளியேறுவதில் பிரச்சனை, பல் வலி, வயிறு மற்றும் தொண்டை பிரச்சனை போன்றவற்றை கிராம்பை கொண்டு சரி செய்யலாம். இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களும் நறுமணப் பொருட்களாக சரும க்ரீம்களாக பயன்படுகின்றன.
28
மன அழுத்தத்திற்கு நிவாரணம்:
கிராம்பில் இருக்கும், யூஜெனோல் என்ற பொருள் மன அழுத்தம் மற்றும் பொதுவான வயிற்று நோய்களைப் போக்க உதவுகிறது. இது, கிராம்பில் போதுமான அளவு உள்ளதால், கிராம்பின் பயன்பாடு மன அமைதியை ஏற்படுத்துகிறது. கிராம்பு தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்தும் குடிக்கலாம்.
கிராம்புகளை உட்கொள்வது பல்வலியைக் குறைக்க உதவுகிறது. ஆம், உங்களுக்கு பல் வலி, ஈறுகளில் வலி இருந்தாலும் அந்த இடத்தில் கிராம்பு வைத்தால் வலியைத் தணிக்கும்.ஏனெனில், ஈறு நோய்கள் ஏற்பட காரணமாக இருக்கும் நான்கு வகையான பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க கிராம்பு உதவுகிறது. மேலும், பற்களில் உண்டாகும் அசௌகரியத்தை சரி செய்ய கிராம்பு உதவுகிறது.
48
நோய் எதிர்ப்பு சக்தி:
தினமும் கிராம்பை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.கிராம்பில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தியாமின், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், உங்கள் உடலை நோய்களில் இருந்து உங்களை பாதுகாப்பாக வைக்கிறது.
படுக்கைக்குச் செல்வதற்கு முன் இரண்டு கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும். மேலும், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை சரி செய்யும். கிராம்பு நார்ச்சத்து நிறைந்தது. இது உங்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு சிறப்பாக செயல்படுகிறது.
68
diabetic
நீரழிவு நோய்:
நீரிழிவு நோயாளிகளுக்கு கிராம்பு இன்சுலின் போல வேலை செய்கிறது. அதாவது, இரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்குவதன் மூலம், அவை இரத்தத்தின் சர்க்கரை சமநிலை செய்கின்றன. எனவே, நீரிழிவு நோயாளிகள் அன்றாடம் உணவில் கிராம்பு சேர்த்து கொள்வது நல்லது.
78
Allergy, cold flu problem
சுவாசப்பாதை:
அதாவது கிராம்பு சுவாசக் குழாயில் உண்டாகும் அழுத்தத்தை தணிக்கிறது மற்றும் எந்த பாக்டீரியாக்களும் உங்கள் நுரையீரலுக்குள் நுழைவதைத் தடுக்கிறது. இதனால், இருமல், சளி, வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து நம்மை பாதுகாப்பாக வைக்க முடியும்.
88
எலும்புகளுக்கு வலிமை :
நமது உடலில் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த கிராம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கிராம்பில் இருக்கும் மாங்கனீசு மற்றும் யூஜெனோல் எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிராம்புகளை உட்கொள்வது எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது.