Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் சாக்லேட்..! நலமுடன் வாழ்வதற்கு ஸ்வீட் எடு கொண்டாடு..!

Published : Sep 12, 2022, 10:54 AM IST

Cholesterol Control Tips: டார்க் சாக்லேட் சாப்பிடுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. குறிப்பாக உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.

PREV
15
Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் சாக்லேட்..! நலமுடன் வாழ்வதற்கு ஸ்வீட் எடு கொண்டாடு..!

கொலஸ்ட்ரால் என்பது நமது இரத்த நாளங்களில் காணப்படும் ஒரு ஒட்டும் பொருளாகும். ஆரோக்கியமான  (ஹெச்டிஎல்) செல்களை உருவாக்குவதே இதன் நோக்கம். ஆனால், உடலில் கெட்ட கொழுப்பின் அளவு (எல்டிஎல்) அதிகரித்தால், உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, மூன்று நாள நோய், பக்கவாதம் மற்றும் கரோனரி தமனி நோய் ஆபத்து ஏற்படத் தொடங்கும். அதே சமயம் எந்த கொலஸ்ட்ராலாக இருந்தாலும் சரி அவை மிதமான அளவில் தான் உடலில் இருக்க வேண்டும், அளவுக்கு மீறினால் ஆபத்து உங்களுக்கு தான்.

மேலும் படிக்க...Wood Apple: விளாம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? மிஸ் பண்ணாம தெரிஞ்சு வச்சுக்கோங்கோ..

25

டார்க் சாக்லேட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துமா..?

டார்க் சாக்லேட் போன்ற கோகோ டெரிவேட்டிவ்களில் 70%க்கும் அதிகமாக பாலிஃபினால்கள் உள்ளன, அவை நமது உடலில் நல்ல கொழுப்பை (ஹெச்டிஎல்) அதிகரித்து நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. 

Cacao பவுடரை விட cocoa பவுடரை பயன்படுத்துவது நல்லது என்று கூறப்படுகிறது. ஏனெனில் Cacao பவுடரில் பாலிஃபீனால்கள் அதிகமாக உள்ளது, இது கொலஸ்ட்ராலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் படிக்க...Wood Apple: விளாம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? மிஸ் பண்ணாம தெரிஞ்சு வச்சுக்கோங்கோ..

35

அதற்காக டார்க் நிற சாக்லேட்டை அதிகம் சாப்பிடலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவாக சாப்பிட்டால் தான் நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு தான்.  

கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவதில், வெள்ளை நிற சாக்லேட்டு முக்கிய பங்கு வகிக்கிறது.  டார்க் சாக்லேட்டிற்கும், வெள்ளை சாக்லேட்டிற்கும் உள்ள வித்தியாசம் ஃப்ளேவர் தான்.  

45

சாக்லேட் சாப்பிடுவதின் நன்மைகள்:

1. சாக்லேட்டில் உள்ள ப்ளேவோனாய்டுகள் மூளைக்கு மிகவும் நல்லது. இந்த ப்ளேவோனாய்டுகள் ஒருவரது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்.

2. சாக்லேட் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.  சாக்லேட்டில் உள்ள லினோலியிக் அமிலம் இதயத்தின் முறையான செயல்பாட்டிற்கு உதவும். 

3. இரத்தத்தை சீராக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் அழுத்துவதோடு, இதயத் துடிப்பை நிலையாக வைத்துக் கொள்ளும்.

55

 

4. சாக்லேட் சாப்பிடுவது மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. 

5. சாக்லேட்டை அடிக்கடி சாப்பிட்டால் அதில் உள்ள டோபமைன் என்ற பொருள் மயக்க உணர்வை உண்டாக்கி மூளையை அமைதியாக்கி இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது.பாலியல் உணர்வை தூண்டும் தன்மை கொண்டது.

6. கொலஸ்ட்ரால் அளவு குறைவதால் உடலில் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு போன்றவை கட்டுக்குள் இருந்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கின்றது.  

மேலும் படிக்க...Wood Apple: விளாம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? மிஸ் பண்ணாம தெரிஞ்சு வச்சுக்கோங்கோ..

Read more Photos on
click me!

Recommended Stories