wood apple
விளாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள்:
விளாம்பழம் ஆயுளை நீட்டிக்கும் தன்மையுடையது. சிறுவர்களுக்கு தினமும் சாப்பிட கொடுப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படுகிறது. தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், பசியை தூண்ட செய்து ஜீரண கோளாறுகளை சீர் செய்கிறது. ரத்தத்தை விருத்தி ஆக்குவதுடன், இதயத்தை பலம் பெறவும் செய்கிறது. விளாம்பழத்தை அரைத்து முகத்தில் பூசி வர, வெயில் காலத்தில் இழந்த பொலிவு மீண்டும் வரும்.
wood apple
விளாம்பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்:
விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் சத்து அதிகமாக எலும்பு மற்றும் பற்களை வலுடையச் செய்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி சத்தும், இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின்ஏ உள்ளிட்ட சத்துக்களும் நிறைந்துள்ளன. பழம் மட்டுமின்றி, அதன் மேல்புற ஓடு, மரத்தின் வேர், பட்டை, இலை ஆகியவற்றிலும் மருத்துவ குணம் உள்ளது. குறிப்பாக விளாம் பழ விதையில் ஒலியிக், பால்மிடிக், சிட்ரிக் உள்ளிட்ட அமிலங்களும், இலையில் சபோரின், வைடெக்சின் உள்ளிட்ட வேதி பொருட்களும், பட்டையில் பெரோநோலைடு உள்ளிட்ட மருத்துவ குணங்களும் உள்ளது.
மேலும் படிக்க...Sani Peyarchi 2022: சனியின் நேரடி அருளால்..இந்த ராசிகளுக்கு திடீர் பண மழை பொழியும்..உங்கள் ராசி இதில் இருக்கா?