சிறுநீர் பாதை:
சிறுநீர் சரியாக வராதவர்கள் வாழைத் தண்டை சாப்பிட்டால் சிறுநீர் பாதை சரியாகும். மலச் சிக்கல் பிரச்சனையை போக்கும். வாழைத் தண்டில் ஜூஸ் பருகுவது, சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீர் வழியாக வெளியேற உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்று, வாழைத்தண்டு சாற்றுடன், எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடிக்கலாம். இவை, சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.