எலும்புகள், பற்கள் உறுதிக்கு, தசைகளின் இயக்கத்திற்கும், நரம்புகளின் செயல்பாட்டிற்கும் கால்சியம் சத்து அவசியமாகும். எனவே, உடலில் கால்சியம் சத்து அதிகரிக்க மருத்துவர்கள் கால்சியம் நிறைந்த உணவுகள் மற்றும் மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர். நமது உடலில் கால்சியம் சத்து குறைந்து விட்டால் முதுகு வலி, கால் வலி, தசைப்பிடிப்பு, மூட்டு வலி, எலும்பு அரிப்பு, நகம், பற்கள் உள்ளிட்ட பல்வேறு உடல் நலம் பாதிப்புகள் ஏற்படும். எனவே, உணவின் மூலம் தினசரி உங்களுடைய கால்சியம் அளவைப் பெற...நீங்கள் ஒரு கிளாஸ் பாலை குடிப்பது அவசியமான ஒன்றாகும்.