முருங்கை இலையில் பல்வேறு ஊட்ட சத்துக்கள்:
முருங்கை இலைகளில் வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், புரதங்கள், கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட பல ஊட்ட சத்துக்கள் உள்ளடக்கியது. மேலும், அவற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஆக்ஸிஜனேற்றங்களும் நிறைந்துள்ளன.இது தவிர, இவற்றில் அதிக அளவு ஐசோதியோசயனேட்ஸ் என்ற ஊட்டச்சத்து உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.