Sani Peyarchi 2022 Palangal: சனி பகவானின் ராசி மாற்றம், 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில் இருக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, நீதி மற்றும் தண்டனையின் கடவுளான சனி பகவான் ஜூன் 5 முதல் அக்டோபர் 23 2022 வரை கும்ப ராசியில் பயணித்தார். இதையடுத்து, சனி பகவான் ஜூலை 12, 2022 அன்று, சனி மகர ராசிக்கு பெயர்ச்சியான நிலையில், ஜூலை 2023 வரை சனி இந்த ராசியில் இருப்பார். இதற்குப் பிறகு அவர் தனது மூல ராசியான கும்பத்தில் நுழைவார். இதனால் அடுத்த ஆறு மாதங்களுக்கு குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களுக்கும் சனிபகவான் கருணை காட்டுவார். சனியின் அருள் மழையில் நனைய காத்திருக்கும் அந்த ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு சனி பகவான் சிறப்பான பலன் தருகிறார். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம். நீண்ட காலமாக தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். சனி பகவான் வேலை மற்றும் வியாபாரம் இரண்டிலும் வெற்றியை அள்ளித் தருகிறார். உங்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.
மகர ராசியில் சனிப்பெயர்ச்சி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு, இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். திடீர் பண ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் சிறப்பாகச் செயல்படுவார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். வெளியூர் பயணம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். தொழிலில் நல்ல ஆதாயம் உண்டாகும். போட்டி தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.
44
Sani Peyarchi 2022
மகரம்:
மகர ராசியில் சனிபகவான் இருப்பதால், உங்களுக்கு சிறந்த பலன் உண்டாகும். இந்த நேரத்தில், திடீர் பண ஆதாயத்திற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் வருமானம் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். எந்தவொரு புதிய வேலையையும் தொடங்க இந்த நேரம் சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான முழு பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வாழ்வில் புது ஒளி பிறக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.