Marburg virus: உலகை பயமுறுத்தும் மார்பர்க் வைரஸ்...கொரோனாவை விட கொடியதாம்..? அறிகுறிகள், பாதிப்புகள் என்னென்ன?

First Published | Jul 21, 2022, 2:20 PM IST

Marburg Virus: வெளவால்களிடமிருந்து வேகமாக பரவி வரும் புது வைரஸான மார்பர்க், வைரஸின் அறிகுறிகள் பாதிப்புகள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

Marburg virus:

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து உலகம் மெல்ல மெல்ல இயல்பு நிலையை எட்டி வரும் நிலையில், மீண்டும் பீதியை கிளப்பும் வகையில் மற்றொரு ஆபத்தான வைரஸ் தாக்குதல் தொடங்கியுள்ளது. மார்பர்க் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Marburg virus:

எப்படி பரவுகிறது.?

பழ வெளவால்களிலிருந்து மக்களுக்கு பரவும், இந்த மார்பர்க் வைரஸால் கடந்த 1967 ஆம் ஆண்டில் மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டதாக பதிவாகியுள்ளன. ஆப்பிரிக்க நாடான கானாவில் இரண்டு (ஒருவருக்கு வயது 26, மற்றவருக்கு வயது 51) நபர்களுக்கு மார்பர்க் வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். எபோலாவை போல் இதுவும் உயிரிழப்பை ஏற்படுத்தும் வைரஸ்தான். இந்த வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளதை அடுத்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் படிக்க...கிச்சனில் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லையா..? இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்...பூச்சிகளை ஓட ஓட விரட்டும்...

Tap to resize

Marburg virus:

மார்பர்க் வைரஸ் பற்றி இதுவரை நாம் அறிந்திடாதவை:

1. மார்பர்க் என்பது கொடிய வைரஸ் என்று அறியப்படும் எபோலாவின் குடும்பத்தைச் சேர்ந்தது. 

2. கொரோனா வைரஸைப் போலவே, மார்பர்க் வௌவால்கள் மூலம் பரவியதாக கூறப்படுகிறது. ஆம், மார்பர்க் வைரஸ் பழந்தின்னி வெளவால்களிடமிருந்து விலங்குகளுக்கும், பின்னர் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் பரவுகிறது.  
 

Marburg virus:

3. மார்பர்க் வைரஸின் ஆரம்ப அறிகுறிகள் திடீரென அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் உடல்நலக்குறைவு ஆகியவை ஆகும். பல நோயாளிகள் மூக்கு மற்றும் பிறப்புறுப்புகளில் ஏழு நாட்களுக்குள் கடுமையான இரத்தப்போக்கு அனுபவிக்கிறார்கள். இந்த அறிகுறிகள் 3 வாரங்கள் வரை நீடிக்கும். 
மேலும் நோயாளிகளின் தோற்றம் கண்கள் ஆழமாக புதைந்தது போல் இருப்பது வெளிப்பாடற்ற முகங்கள் மற்றும் தீவிர சோம்பல் ஆகியவற்றுடன் சொல்லலாம்.

மேலும் படிக்க....Pumpkin: ஆண்களின் விந்தணு அதிகரிக்க பூசணி விதை பெஸ்ட்...நன்மைகள் ஏராளம் கொண்ட அதிசய விதை!

Marburg virus:

4. இந்த மார்பர்க் வைரஸிற்கு எந்தவித சிகிச்சையும் அல்லது தடுப்பூசியும் இல்லை, இது எபோலாவைப் போலவே ஆபத்தானது. ஆனால், RT-PCR சோதனைகள் மூலம் இந்த நோயை கண்டறியலாம்.

5. பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மார்பர்க் வைரஸிலிருந்து மீண்டவர்கள் மூலமும் மார்பார்க் வைரஸ் பரவும் அபாயம் இருக்கிறது. எனவே, கவனமாக இருக்க வேண்டும்.

6. இதிலிருந்து, நம்மை தற்காத்து கொள்ள எந்தவித அறிகுறிகளையும் அலட்சியம் கொள்ளாமல், அருகில் உள்ள மருத்துவரை அணுகுவது நல்லது. 

மேலும் படிக்க...கிச்சனில் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லையா..? இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்...பூச்சிகளை ஓட ஓட விரட்டும்...

Latest Videos

click me!