
நம் வீட்டின் சமையல் அறையில் இருக்கும் பல மசாலா பொருட்கள் மருத்துவ குணம் கொண்டது. அவற்றை நம் முறையாக பயன்படுத்தி வந்தால் பல நோய்களுக்கு மருந்து சாப்பிட வேண்டிய தேவையில்லை. அவற்றில் ஒன்றுதான் பெருஞ்சீரகம். நாம் அனைவரும் சாப்பிட்ட உடனே பெருஞ்சீரகத்தை சாப்பிடுவதை வழக்கமாக்கி உள்ளோம். இது சாப்பிட்ட பிறகு இனிப்புக்கான ஏக்கத்தை தணிக்கவும், உணவு விரைவில் ஜீரணிக்கவும் உதவுகிறது. கூடுதலாக வயிறு தொடர்பான பிரச்சனைகளையும் சரி செய்யும்.
பெருஞ்சீரகத்தில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், ஆக்ஸிஜற்றிகள் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை நம்முடைய மிகவும் நன்மை பயக்கும். பெருஞ்சீரகம் வாய் பிரெஷ்னராக அடிக்கடி நாம் பயன்படுத்துவோம். இத்தகைய சூழ்நிலையில், பெருஞ்சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அது என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: சாப்பிட்ட பிறகு 1 ஸ்பூன் பெருஞ்சீரகம் சாப்பிட்டால் என்ன ஆகும்?!
செரிமானத்திற்கு நல்லது:
பெருஞ்சீரகம் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. நம்மில் பலர் உணவு சாப்பிட்ட பிறகு பெருஞ்சீரகம் சாப்பிடுவோம் காரணம் அது செரிமானத்தை துரிதப்படுத்தும் மற்றும் வாய் துர்நாற்றத்தை தடுக்கும். எனவே, தினமும் காலை வெறும் வயிற்றில் பெருஞ்சீரக தண்ணீர் குடித்து வந்தால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்கு அஜீரணம், வாயு, வயிற்று வீக்கம் போன்ற வயிற்றுத் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் கண்டிப்பாக இந்த தண்ணீர் குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
கண்ணுக்கு நல்லது:
பெருஞ்சீரகத்தில் வைட்டமின் ஏ அதிகளவு உள்ளது. இது கண் பார்வை அதிகரிக்க செய்யும். எனவே தினமும் வெறும் வயிற்றில் பெருஞ்சீரக நீர் குடித்து வந்தால் கண் சம்பந்தமான பிரச்சினைகள் சரியாகும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்:
பெருஞ்சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல் உள்ளது. இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முக்கிய பங்கு வைக்கிறது. மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.
உடல் எடையை குறைக்க உதவும்:
பெருஞ்சீரகத்தில் பசியின்மை போக்கும் பண்புகள் உள்ளன. இது உடல் எடையை குறைப்பிற்கு பெரிதும் உதவுகிறது. எனவே, தினமும் காலை வெறும் வயிற்றில் பெருஞ்சீரக தண்ணீர் குடித்து வந்தால் நம் உடலில் இருக்கும் மெடபாலிஸத்தை துரிதப்படுத்தி, உடல் எடை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி, வயிற்றில் சேரும் கொழுப்பை குறைக்கவும் பெருஞ்சீரகம் உதவுகின்றது.
உடலை நீரேற்றமாக வைக்கும்:
நீங்கள் தினமும் காலை விரும்பியிற்றில் பெருஞ்சீரக தண்ணீர் குடித்து வந்தால் அது உங்களது உடலை நீரேற்றமாக வைக்கும். இதனால் உங்களது ஒட்டு மொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
இதையும் படிங்க: உணவுக்கு பிறகு பெருஞ்சீரகம் சாப்பிட சொல்றாங்களே; அது ஏன் தெரியுமா? தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!
நச்சுக்களை வெளியேற்றும்:
உடல் ஆரோக்கியமாகவும், முகம் பளபளப்பாகவும் இருக்க உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது மிகவும் அவசியம். இதை தான் பெருஞ்சீரக தண்ணீர் சரி செய்கிறது. பெருஞ்சீரகம் நம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற வருகிறது. இதன் தாக்கமானது நம்முடைய சருமத்தில் தெரியும். அதாவது சருமம் ஆரோக்கியமாக இருந்தால், பளபளப்பாக தெரியும்.
பற்கள் & ஈறுகளுக்கு நல்லது:
பெருஞ்சீரகத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது வயிற்றில் புத்துணர்ச்சியூட்டும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. எனவே வெறும் வயிற்றில் பெருஞ்சீரக தண்ணீர் தினமும் குடித்து வந்தால் உங்களது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
பிற நன்மைகள்:
இதை ஆரோக்கிய மேம்படும், பால் சுரப்பதற்கு உதவியாக இருக்கும், இருமல் மற்றும் சளிக்கு பயனுள்ளதாக இருக்கும், உடலில் வீக்கத்தை தடுக்கும்,