
நம்முடைய வீடுகளில் ஏதேனும் விசேஷங்கள் நடந்தால் பூஜை செய்வது முதல் சாப்பாடு பரிமாறுவது வரை வாழை இலைக்கென்று தனிபங்கு உண்டு. வாழை இலை இல்லாத சுப காரியங்களை, அவ்வளவு ஏன் அசுப காரியங்களை கூட காண்பது கடினம். திருமண விழாக்களில் பொதுவாக வாழையிலேயே விருந்து பரிமாறுவார்கள். இப்படி வாழையிலை தேர்ந்தெடுக்க ஏதேனும் சிறப்பு காரணங்கள் இருக்கிறதா என்பதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உண்மையில் நம் முன்னோர் வாழை இலையை உணவு பரிமாற தேர்வு செய்ய சிறப்பு காரணம் இருக்கிறது.
நாம் பரிமாறும் உணவில் உள்ள நஞ்சினை நீக்கும் சக்தி வாழை இலைக்கு உண்டு. அதெப்படி, வாழை இலை நஞ்சு நீக்கும் என தோன்றுகிறதா? ஆனால் உண்மைதான். இப்போதும் கிராமங்களில் பாம்பு சீண்டினால் உடனடி முதலுதவியாக வாழை மட்டையை எடுத்து சாறு பிழிந்து கொடுப்பார்கள். வாழையின் அடிக்கிழங்கில் சுரந்து வரும் நீரை அருந்த கொடுப்பார்கள். விழாக்களில் வாழை கட்டுவதற்கு பின்னணியும் இதுதான். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதாவது கோயில் திருவிழா, மண விழா என சுப நிகழ்வுகளில் ஏன் இறப்பு வீடுகளில் கூட வாழை இடம்பெறுவது இதற்காகதான். ஏதேனும் பூச்சி தீண்டினால் கூட உடனடியாக முதலுதவி செய்ய வாழை உதவியாக இருக்கும். இப்படிதான் வாழையிம் அடையாளம் மங்களகரமாக மாறி வந்தது.
இதையும் படிங்க: இந்த நன்மைகளை பற்றி தெரிந்து கொண்டால் இனி கண்டிப்பா வாழை இலைகளில் தான் சாப்பிடுவீங்க..
நச்சு முறிப்புக்காக தான் தமிழர்கள் வாழைமரத்தை சுப நிகழ்ச்சிகளில் கட்டத் தொடங்கினார்கள் என தகவல்கள் உள்ளன. திருமண பந்தல் தொடங்கி, இடுகாட்டு நிகழ்வு வரை வாழை அவசியமாகிவிட்டது. எந்த கெட்டதும் நடக்காமல் தடுப்பதே அது நல்லது தானே. முன்னோரின் இந்த செயல் தான் மங்களகரமான அடையாளமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: வாழை இலையில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்! இவ்ளோ நாள் தெரியாம போச்சே!
வாழை இலையில் உணவு பரிமாறுவது ஏன்?
வாழை இலையில் சாப்பிடுவது நஞ்சை முறிப்பது மட்டுமின்றி மற்ற நன்மைகளையும் கொண்டுள்ளது. வாழை இலை சாப்பிடுவதற்கு வசதியாக இருப்பதோடு இல்லாமல் அதில் பல்வேறு சத்துக்களும் காணப்படுகின்றன. அதில் நம் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்சிடன்ட் மிகுந்துள்ளது. வாழை இலையில் அடிக்கடி சாப்பிடுவது செல் சிதைவை தடுத்து முதுமையை தாமதமாக்கும். வாழை இலையில் சூடாக சாப்பிடுவதால் மனநிலை சமநிலையாகி மன அழுத்தம் குறையும். இதய நோய் ஆபத்து குறைகிறது.
வாழை இலையின் நன்மைகள்: