வேலியில் கிடக்கும் சங்குப்பூ அள்ளி தரும் நன்மைகள் தெரியுமா?

First Published | Feb 25, 2023, 11:18 AM IST

Benefits of sangu poo: சங்குப்பூவில் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டும் தன்மை இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

சங்குப்பூவை சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் ஆகிய பெயர்களிலும் அழைக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள காடுகள், வேலிகளில் சங்குப்பூ இருக்கும். இதனுடைய இலை, வேர், பூக்கள், விதை யாவும் மருத்துவத்தில் பயன்படுத்தக் கூடியவை தான். சங்குப்பூவை தொட்டு வீசும் காற்றை நாம் சுவாசித்தால் கூட சுவாசக் கோளாறு நீங்குமாம். 

சங்குப்பூ- இலை நன்மைகள் 

இந்த சங்குப்பூ செடியின் இலைகளில் துவர்ப்பு சுவை உள்ளது. இவை வெப்பத்தன்மையை உடையவை. இவற்றை தகுந்த ஆலோசனைகளோடு எடுத்து கொண்டால் சிறுநீர் பெருகும். குடல் புழுக்கள் நீங்கும். உடல் வெப்பம் குறையும். அதே நேரம் வாந்தி, பேதி கூட வரும். தலை தொடர்பான நோய், கண் சார்ந்த நோய்கள், மந்தம் முதலியவையும் குறையும்.  

Tap to resize

சங்குப்பூ - மலர் நன்மைகள் 

இதனுடைய மலர்ச்சாற்றை அருந்தினால் கல்லீரல் வலுப்படும். தேமல், கரும்புள்ளிகள் கூட சரியாகும் என கூறப்படுகிறது. இரண்டு தேக்கரண்டி சங்குப்பூ சாற்றை, சரிசமமாக எடுத்து அதனுடன் இஞ்சி சாறு கலந்து கொள்ளுங்கள். அதனுடன் கொஞ்சம் தேன் விட்டு காலை, மாலை ஆகிய இரண்டு நேரத்திலும் அருந்த வேண்டும். இப்படி பருக வயிற்றில் உள்ள பூச்சிகள் ஒழியும். 

வீக்கம் வந்தால் அதற்கு ஏற்ற அளவில் சங்குப்பூ இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி, வீங்கிய பகுதியில் கட்ட வீக்கம் குறையும். சங்கு பூ செடியின், மலர்கள், இலை போன்றவற்றை தண்ணீரில் போட்டு காய்ச்சி, இஞ்சி சாறு கலந்து அருந்தினால் நல்லது. இதில் சுவைக்காக பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு கலந்து கொள்ளலாம். இது சிறுநீரக நோய்களுக்கு நல்ல பலன் தரும். 

இதையும் படிங்க: வெறும் வயிற்றில் தினமும் துளசி சாறு.. சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க துளசியை இப்படி யூஸ் பண்ணனும்..

சங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களுக்கு நல்லது. அதுமட்டுமில்லாமல் காய்ச்சலையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். சங்குப்பூவின் விதை புளிப்பு சுவையுடையது. இதன் சுவை, வாசனை காரணமாக சர்பத் போன்ற பான வகைகளில் சேர்த்து கொள்கிறார்கள். சங்குப்பூ சேர்க்கப்படுகின்றது. கோடைகாலம் நெருங்கிவருகிறது. அப்போது சர்பத்தில் சேர்த்து அருந்தி மகிழுங்கள். 

இதையும் படிங்க: பப்பாளியை இந்த மாதிரி நேரத்தில் மறந்தும் சாப்பிடாதீர்கள்,மீறினால் உடலில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம்

Latest Videos

click me!