நாம் அடிக்கடி பப்பாளி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் மெக்னீசியம், நார்ச்சத்து, வைட்டமின்கள், நார்ச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, பல நோய்களை எதிர்த்துப் போராட நமக்கு தெம்பு அளிக்கிறது. இதை அடிக்கடி உண்பதன் மூலம், உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
பப்பாளி நம் இதயம் சரியாக வேலை செய்ய உதவுகிறது. நமது வயிற்றின் செரிமான அமைப்பை நலமாக வைத்திருப்பதில் கூட இதற்கு இணை எதுவும் இல்லை. இவ்வளவு நன்மை பயக்கும் பழமாக இருந்தாலும், சில நேரங்களில் பப்பாளியை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எந்தெந்த நபர்கள், எப்போது பப்பாளியை சாப்பிடக்கூடாது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
தோல் ஒவ்வாமை
உங்களுக்கு தோல் ஒவ்வாமை இருந்தால் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனை உட்கொள்வதால் உடலில் சிவப்பாக சொறி ஏற்படும். தலைவலி, தலைசுற்றல், வீக்கம் போன்றவை ஏற்படும். லேடெக்ஸ் ஒவ்வாமை உள்ளவர்களும் பப்பாளியை சாப்பிடக்கூடாது.
குறைந்த சர்க்கரை அளவு உள்ளவர்கள்
பப்பாளி பழத்தை இரத்தத்தில் குறைந்த சர்க்கரை அளவு உடையவர்கள் (லோ சுகர்) சாப்பிடவே கூடாது. இவ்வாறு செய்வதால் அவர்களின் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். சர்க்கரை நோயாளிகள், மருத்துவரின் ஆலோசனையின்றி பப்பாளி பழத்தை சாப்பிடக் கூடாது.