தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த தினம் இன்று. கடந்த 1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி பிறந்த ஜெயலலிதா, தமிழில் கொடிகட்டி பறந்த நடிகை.
கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் அரசியலில் கோலோச்சிய அரசியல் ராஜதந்திரி. நீண்டகாலமாக அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்தார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி இயற்கை எய்தியதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அவர் அரசியலுக்கு வந்த கதையை இங்கு காணலாம்.
தமிழ் திரையுலகில் பலர் நெஞ்சங்களை கவர்ந்த ஜெயலலிதா, நடித்து கொண்டிந்த காலங்களிலே அவருக்கு அரசியல் ஆசை வந்தது. அவர் அரசியல் களத்துக்கு வந்த கதையை தெரிந்து கொள்ள வேண்டுமெனில் நாம் பல ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். எவ்வளவு ஆண்டுகள்? 1980க்கு போக வேண்டும். ஆம். முதல் முதலாக எம்ஜிஆரிடம் அரசியலில் ஈடுபட ஆசைப்படுவதாக ஜெயலலிதா அப்போதுதான் கூறினாராம்.
ஆனால் ஜெயலலிதா சொன்னாலும் எம்ஜிஆர் அதற்கு உடனே ஒப்புகொள்ளவில்லை. ஜெயலலிதாவிடம் நிறைய அரசியல் தெரிந்து கொள்ள வேண்டும். நிறைய படிக்க வேண்டும் என கூறிவிட்டு அந்த உரையாடலை முடித்து கொண்டாராம். ஆனால் ஜெயலலிதாவிற்கு அரசியல் வரும் ஆர்வம் குன்றவில்லை.
அ.தி.மு.க.வின் கோட்பாடுகளை குறித்து தெரிந்து கொள்ள அதன் கொள்கை உள்ளடக்கம் கொண்ட புத்தகத்தை ஜெயலலிதாவிடம் கொடுத்து ஆழ்ந்து படிக்கச் சொல்லியிருக்கிறார் எம்ஜிஆர். இந்த புத்தகத்தை படித்த சில மாதங்களுக்கு பிறகு தான் அந்த கட்சியில் இணையவே முடிந்திருக்கிறது. இந்த தகவல்களை ஜெயலலிதாவே ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சில ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்டிருந்தார். இப்படிதான் அவர் அதிமுகவிற்குள் நுழைந்து பின்னாளில் ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டியெழுப்பியிருக்கிறார்.
இதையும் படிங்க: குண்டுமணி தங்கம் கூட இல்லாம வருத்தமா.. இந்த ஒரு காரியத்தை மட்டும் செய்தால்..கணக்கு தெரியாத அளவிற்கு நகை சேரும்