உடல் ஆரோக்கியத்திற்கு எல்லா சத்துக்களும் இன்றியமையாதவை. நீற்றுப்பூசணியை உண்பதால் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும். அதை குறித்து இந்த பதிவில் காணலாம். நீற்றுப் பூசணியில் ரொம்பவே குறைவான கலோரி தான் உள்ளது. நீர்ச்சத்தும் நார்ச்சத்துக்களும் இருப்பதால் செரிமானத்தை இளகுவாக்குகிறது. அதீத பசியை கட்டுக்குள் வைக்கும்.
நீற்றுப்பூசணியில் ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிகம் உள்ளன. இதனால் நம் உடலில் உள்ள செல்களை ப்ரீ ரேடிக்கலில் இருந்து பாதுகாப்பாக வைக்கிறது. நமக்கு ஏற்படும் அழற்சியை கூட எதிர்த்து போராடும் ஆற்றலை தருகிறது. குறிப்பாக புற்றுநோய் செல்களின் பரவலை தடுக்கவும் இந்த பூசணி உதவுகிறது.
இந்த பூசணியை சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. இந்த வைட்டமின் தான் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைப்பதில் உதவுகிறது. நமக்கு ஒருநாளில் கிடைக்க வேண்டிய வைட்டமின் சி அளவில் 19 விழுக்காட்டை நீற்றுப்பூசணியால் தர முடியும் என கூறப்படுகிறது.