Health Benefits: வேப்ப இலையின் ஆரோக்கிய நன்மைகள் நாம் அறிந்த ஒன்றாகும். ஆனால், வேப்ப இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
இயற்கையிலேயே பல்வேறு மருத்துவ குணம் கொண்ட, வேப்ப மரம் நம் நாட்டில் உள்ள பெரும்பாலான வீட்டில் வளர்க்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு வேப்ப மரம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நல்ல ஆரோக்கியத்திற்கும் இது முக்கியமானது. பொதுவாக ஆயுர்வேதத்தில் பல ஆண்டுகளாக வேம்பு பயன்படுத்தப்படுகிறது. வேம்பு கசப்பாக இருக்கும். ஆனால் வேப்ப இலையை தினமும் வெறும் வயிற்றில் உட்கொண்டால், பல உடல்நலப் பிரச்சனைகளை சமாளிக்கலாம். எனவே, வேப்பிலையை உண்பதால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி மற்ற நன்மைகளும் இது ஏற்படுகிறது. அவை என்ன என்பதை இங்கே பார்த்து தெரிந்துக்கொள்வோம்.
1. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் வேம்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் 5 முதல் 6 வேப்ப இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
2. சுவாசம் தொடர்பான பிரச்சனை இருந்தால், வேப்ப இலைகளை உட்கொள்வது நன்மை பயக்கும்.
3. சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது மட்டுமின்றி, சருமத்திற்கு இயற்கையான பொலிவையும் வேப்ப இலை தருகிறது.
4. கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் வேம்பு அதன் சிகிச்சையாக இருக்கலாம். வேப்பம்பூவை தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோயைத் தடுக்க உதவும்
45
Health Benefits:
5. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த, வேப்ப இலைகளை உட்கொள்வது பயன் தருகிறது. மேலும், ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு போன்ற பண்புகள் வேப்ப இலையில் காணப்படுவதால், உடலை பல தொற்றுகளில் இருந்து விலக்கி வைக்க முடியும்.
6. வேப்ப மரப்பட்டை சாறு இரைப்பை அதி அமிலத்தன்மையை போக்க உதவுகிறது. மேலும், மலேரியாவுக்கு வேம்பு சிறந்த சிகிச்சையாகும்.