Gokulashtami Special 2022:
செய்யக்கூடியவை:
1. கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு பிடித்தமான வெண்ணெய், அப்பம், பொறி, அவல், வெல்லம், சீடை, கொழுக்கட்டை உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து பூஜை செய்ய வேண்டும்.
2. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருடைய பாதங்களை வரைந்து வழிபட்டால், குழந்தை இல்லாத தம்பதியினருக்கு வீட்டில் கிருஷ்ணர் பிறப்பதாக ஐதீகம் உண்டு.
Gokulashtami Special 2022:
3. அரிசி மாவால் வாசற்படியில் ஆரம்பித்து பூஜை அறையில் இருக்கும் கிருஷ்ண பகவானை சென்றடையும் வரை அவருடைய திருபாதங்களை வரைய வேண்டும்.
4. ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவு நேரத்தில் பிறந்ததால் கிருஷ்ண ஜெயந்தியை சூரியன் மறைந்த பிறகு இரவு நேரங்களில் கொண்டாடுவது ரொம்பவும் சிறப்பானதாக இருந்து வருகிறது.
Gokulashtami Special 2022:
செய்யக்கூடாதவை:
1. இந்த நாளில் மாலை வரை குளிக்காமல் இருப்பது, வீட்டில் தரித்திரம் உண்டு பண்ணும்.
2. கசப்பு நிறைந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். எனவே, கிருஷ்ணருக்கு பிடித்த இனிப்பு உணவுகளை செய்து கொடுக்க வேண்டும்.
இந்த நாளில் பெரியோர்களிடம் சண்டை, சச்சரவுகளை தவிர்க்க வேண்டும்.