Kidney Disease: சிறுநீரக கல் பிரச்சனை இருக்கா..? அப்படினா..! இந்த உணவுகள் பக்கம் போகவே போகாதீர்கள்..

Published : Aug 18, 2022, 07:01 AM IST

Kidney Disease: சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும், எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

PREV
17
Kidney Disease: சிறுநீரக கல் பிரச்சனை இருக்கா..? அப்படினா..! இந்த உணவுகள் பக்கம் போகவே போகாதீர்கள்..
kidney disease

இன்றைய நவீன வாழ்க்கை முறையால் சிறுநீரக கற்கள் இன்று மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் நமது உணவு பழக்கம். ஆம், நீங்கள் உண்ணும் கால்சியம்-ஆக்சலேட் அதிகம் உள்ள சில உணவுகள் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க நல்ல வாழ்க்கை முறை, உணவு முறை மிக அவசியமாகும். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள  எந்த வகையான காய்கறிகளை உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

27
kidney disease

எந்தெந்த காய்கறிகளை சாப்பிடக்கூடாது

சிறுநீரக கல் உள்ள நோயாளிகள், விதைகள் உள்ள காய்கறிகளை சாப்பிடவே கூடாது. இது தவிர, அதிக அளவு சோடியம் உள்ள பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், குளிர் பானங்கள், சாக்லேட், தேநீர் போன்றவற்றை சாப்பிடுவது ஆபத்தை விளைவிக்கும். தவறுதலாக கூட இந்த காய்கறிகளை உணவில் சேர்க்காதீர்கள். 

மேலும் படிக்க...Rahu Ketu Peyarchi 2022: மேஷ ராசியில் ராகுவுடன், சந்திரன் கூட்டணி, சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய 4 ராசிகள்

37
kidney disease

கீரை

உங்களுக்கு சிறுநீரக கற்கள் பிரச்சனை இருந்தால், கீரை அதிகமாக சாப்பிட வேண்டாம். கீரையில் உள்ள ஆக்ஸாலிக் அமிலம் உடலில் கால்சியம்-ஆக்சலேட்டை ஏற்படுத்தும். ஏனெனில் அது சிறுநீரக கல் பிரச்சனையை மேலும் அதிகரிக்கிறது. 

47
kidney disease

தக்காளி:

தக்காளி சிறுநீரக கல் அபாயத்தை அதிகரிக்கிறது. தக்காளி விதையில் உள்ள ஆக்சலேட் உடலில் கற்களை உண்டாக்குகிறது. தக்காளியில் ஆக்சலேட் குறைந்த அளவில் காணப்பட்டாலும், தேவைக்கு அதிகமாக தக்காளியை உட்கொள்வது பிரச்சனையை அதிகரிக்கும்.  

57
kidney disease

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை அதிகமாக உட்கொள்வதால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்கிறது. இது 'ஹைபர்கேலீமியா' என்று அழைக்கப்படுகிறது.

மேலும் படிக்க...Rahu Ketu Peyarchi 2022: மேஷ ராசியில் ராகுவுடன், சந்திரன் கூட்டணி, சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய 4 ராசிகள்

67
kidney disease

கத்தரிக்காய்

கீரையைப் போலவே, கத்தரிக்காயிலும் ஆக்சலேட்டுகள் உள்ளன, இது கற்களின் அளவை அதிகரிக்க உதவுகிறது. சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது.

 

77

அப்படி என்றால் மக்னீசியம் நிறைந்த உணவுகளான பருப்பு வகைகள், வெண்ணெய்,
போன்றவை உணவில் சேர்த்து கொள்ளலாம். மேலும், உணவில் ப்ரோக்கோலி, குடைமிளகாய், பாகற்காய், வெண்டைக்காய், ஆப்பிள், அஸ்பாரகஸ்,வாழை, பட்டாணி மற்றும் பீன்ஸ் மற்றும் எலுமிச்சை போன்ற உணவுகளை சேர்த்து கொள்ளலாம்.

மேலும் படிக்க...Rahu Ketu Peyarchi 2022: மேஷ ராசியில் ராகுவுடன், சந்திரன் கூட்டணி, சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய 4 ராசிகள்

Read more Photos on
click me!

Recommended Stories