நெய் என்பது பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக நெய் என்பது இந்திய சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக இருந்து வருகிறது. இந்த நவீன காலத்திலும் நெய்யின் பல நன்மைகள் நவீன அறிவியலால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் ஆரோக்கியமான உணவாக மீண்டும் வந்துள்ளது. நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஏ, டி, ஈ & கே உள்ளிட்ட பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
நெய் உடலுக்கு பயனுள்ள ஊட்டச்சத்துக்களை வழங்கவும், ஆரோக்கியமான கொழுப்பை மேம்படுத்தவும் மற்றும் பல கோளாறுகளைத் தடுக்கவும் உதவுகிறது.. நெய் தினசரி உட்கொள்ளும் வைட்டமின் ஈயில் 11% மற்றும் வைட்டமின் ஏ 100% வழங்க முடியும். மேலும் இதில் பியூட்ரிக் அமிலம், ஒரு முக்கியமான குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலம் உள்ளது. நிறைவுறாத கொழுப்பு அமிலங்களில், அத்தியாவசிய ஒமேகா-3 லினோலெனிக் அமிலத்தைத் தவிர, ஒலிக் அமிலமும் காணப்படுகிறது என்று உணவு கலவை மற்றும் பகுப்பாய்வு இதழ் கூறுகிறது.